வீரப்பனின் வாழ்க்கை சார்ந்த புத்தகத்தின் கதையை படமாக எடுக்கும் உரியமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் எழுதிய Chasing The Brigand என்ற புத்தகத்தின் கதையை படமாகவோ அல்லது வெப் சீரிஸாகவோ எடுப்பதற்கான உரிமைகளை வாங்கியுள்ளனர். அந்தப் புத்தகம் சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை விவரிக்கிறது
மேலும் “அந்தப் புத்தகத்தில் இருக்கும் கதையை யாராவது படமாகவோ அல்லது வெப் சீரிஸாக எடுத்தாலோ, இந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் பற்றிய கதைகள் எடுத்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளனர்.