பார்வையாளர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருவதை அடுத்து, பீஸ்ட் படம் திட்டமிடப்படுவதற்கு முன்னதாகவே ஓ.டி.டி தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு தமிழில் வெளியான படம் பீஸ்ட். ரசிகர்களின் பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற தவறியுள்ளது. படத்தை பெருமளவி எதிர்பார்த்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனால் நடிகர் விஜய் மற்றும் பீஸ்ட் படக்குழுவை விமர்சித்து தொடர்ந்து பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் பீஸ்ட் படத்தின் தியேட்டர் வணிகம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டதை விட முன்பாகவே படத்தை ஓ.டி.டி-யில் வெளியிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் எதிர்பார்த்தளவுக்கு செல்லவில்லை என்றாலும், பீஸ்ட்’ படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெளிவரவுள்ளது.
சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளங்களில் ஒன்றாக பீஸ்ட் திரைப்படம் வரும் மே 11-ம் தேதி வெளிவர வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 3-வது வாரத்தில் பிரைம் தளத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.