தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருப்பவர் தளபதி விஜய் இவர் படம் அறிவிப்புலிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்புவரை இவரது ரசிகர்கள் இவரை கொண்டாடுகின்றனர்

இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த பிகில் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்தது அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்து இசை வெளியிட்டு விழாவும் மிக பிரமாண்டமாக நடந்தது.
இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஷாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய திரைப்படம் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விஜய் திடீரென நண்பர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க கூடியவர் அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் தனது நெருங்கிய நண்பர்களான சஞ்சீவ் உள்ளிட்ட பலரிடம் வீடியோ காலில் பேசினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி மிகப்பெரும் வைரலானது. இந்நிலையில்,விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விஜய் எப்போதும் சொல்லும் ”Ignore Negativity” என்ற கருத்தை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு சமூக வலைதளத்தில் “ட்ரெண்ட்”ஆகி வருகிறது.




