நடிகர் விஜய் தனது இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தி ல்நடிகர் விஜய்யின் தந்தை எஸ்,ஏ.,சந்திரசேகர் பாஜகவின் இணையவுள்ளதாக வதந்திகள் வெளியானது.
இதற்குப் பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகரில் அந்தத்தகவல் உண்மையில்லை …நான் உயிருடன் இருப்பது உங்களுக்குப் பிடிக்கலையா ? எனக்கேள்வி கேட்டார்.
இதையடுத்து மீண்டும் சில நாட்களுக்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பாஜகவின் இணையவுள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
நான் ஏற்கனவே ஒரு அமைப்பில் தான் இருக்கிறேன்…தேவைப்படும்பொழுது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதை வரவேற்கிறேன் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை சென்னை பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் திருச்சி, மதுரை, குமரி மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகளுடனும் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
விஜய்யின் தந்தைநான் ஏற்கனவே ஒரு அமைப்பில் தான் இருக்கிறேன்…தேவைப்படும்பொழுது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று தெரிவித்த நிலையில் இன்று விஜய் ஆலோசனை நடத்தியுள்ளது அடுத்த வருடம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக ஆயத்தமா என்ற கேள்வி எழுந்துள்ளது.




