கொரோனா அறிகுறியினால் வீட்டில் தனியாக இருந்த நீண்ட கால நண்பரை நேரில் சென்று சந்தித்து உணவளித்த இளைய தளபதி விஜய்
விஜய்க்கு எப்போதும் நண்பர் பட்டாளம் உண்டு. அவரது நீண்ட நாள் நண்பர் சஞ்சீவ் பத்ரி போன்ற படங்களில் விஜயுடன் நடித்தவர். தனது நண்பருடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார் சஞ்சீவ். பேட்டிகளிலும், பத்திரிகை சந்திப்புகளிலும் விஜயை பழமை மறவாதவர் என்று சஞ்சீவ் குறிப்பிடுவார். பெரிய நிலை அடைந்த போதிலும் எப்போதும் மாறாமல் நல்ல நண்பராக இருப்பவர் என்று திரையுலகில் விஜய்க்கு பாராட்டுகள் பலமுறை வருவதுண்டு

இந்நிலையில், ஓரிரு மாதங்கள் முன், கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், தனது மனைவி, பிள்ளைகளை அனுப்பிவிட்டு வீட்டில் தனியாக இருந்திருக்கிறார் சஞ்சீவ். விவரம் அறிந்த விஜய் உடனே அவர் வீடு தேடிச் சென்று காவலாளியிடம் உணவளித்து தனது நண்பரைச் சந்தித்தார்.
அவரது அடுத்த படமான மாஸ்டர் திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்




