விஜய்சேதுபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதில் நேற்று படப்பிடிப்பில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
அதில் அவர் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்ப, அது குறித்தான விளக்கம் அளித்துள்ளார் விஜய்சேதுபதி. அவர் தெரிவித்திருப்பதாவது ‘மூன்று நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியிருப்பேன்.
தற்போது பொன்ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்லேன். அதில் கதைப்படி, பட்டாக்கத்தி முக்கிய கதாப்பாத்திரம். அதனால், பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டினேன். இது தவறான முன்னுதாரணம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனமாக இருப்பேன். இந்த சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ எனவும் கூறியுள்ளார்.