
விரைவில் ஓ.டி.டி தளத்தில் டாணாக்காரன் படம் வெளியாகவுள்ளதை அடுத்து, படக்குழுவினர் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் ஊடகங்களை சந்தித்து படம் தொடர்பான சுவாரஸ்யமான அனுபவங்களை தெரிவித்தனர்.
டாணாக்காரன் படத்தில் ஹீரோவாக நடித்த விக்ரம் பிரபு, படத்தின் கதையை இயக்குநர் கூறும்போது தான் அவரும் போலீஸாக இருந்துள்ளார் என்று தெரியவந்தது. படத்தை தியேட்டரில் பார்க்க நாங்கள் விரும்பினோம் என்றாலும், அதைவிட அதிகப்படியான மக்கள் டி.வி-யில் பார்க்கும் விதமான வாய்ப்பு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
தியேட்டரை தாண்டி, படம் எல்லரையும் சென்றடைவது முக்கியம். அது இந்த படத்திற்கு நடப்பது மகிழ்ச்சி என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குநர் தமிழ், காவல்துறை பயிற்சிக்கு செல்லும் ஒருவனுக்கும், அங்குள்ள உயர் அதிகாரி ஒருவருக்குமிடையே ஒரு அதிகார மோதல் எழுகிறது. அதனை சமாளித்து அவன் எப்படி காவல் அதிகாரி ஆகிறான் என்பதே கதை. டாணாக்காரன் என்றால் காவலர் என்று பொருள். தமிழ் சினிமாவில் போலீஸ் அகாடமி பற்றி பேசும் முதல் படம் இதுதான் என்று தெரிவித்தார்.
இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். நெடுநெல்வாடை முடிந்த பிறகு, இந்த படத்தில் நடித்தேன், ஜெய் உடன் ஒரு படம் பண்ணியுள்ளேன். CV குமார் சாருடைய ஒரு படத்தில் நடித்துள்ளேன். நிறைய படங்கள் பண்ணுவதை விட சரியான படங்கள் செய்ய வேண்டும். இந்த படத்தில் இயக்குனர் சொன்னதை அப்படியே செய்துள்ளேன். மிகவும் அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளதில் மகிழிச்சியாக உள்ளது.
பிரபல ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ள டாணாக்காரன் படத்தை S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, P.கோபிநாத் மற்றும் தங்க பிரபாகரன் .R. உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், பாவெல், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




