விஜே சித்ராவுடன் தன்னை தொடர்பு படுத்தி வரும் சர்ச்சைகளுக்கு விஜே ரக்ஷன் பதிலளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் அவர் தற்கொலைக்கு காரணம் கணவர் ஹேமந்த், சித்ராவுடைய துறை சார்ந்தும் பொருளாராதார ரீதியாகவும் கொடுத்த மன அழுத்தம்தான் காரணம் என காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை.
READ MORE- ”மீண்டும் காதலிக்கிறேன்’- வனிதா விஜயகுமார் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!
இந்த நிலையில், சித்ராவின் தற்கொலைக்கு விஜே ரக்ஷனும் ஒரு காரணம் எனவும் அவருக்கும் சித்ராவுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததாகவும் அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிடுவேன் என அவர் சித்ராவை மிரட்டியதாகவும் பல வதந்திகள் கிளம்பின.
இது குறித்து ரக்ஷன் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார். சித்ராவுக்கும் எனக்கும் இருந்தது தொழில் ரீதியிலான நட்பு மட்டுமே எனவும், அவருடன் நெருங்கி பழகியது எல்லாம் இல்லை தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.