வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக, தொழில் தொடங்க விரும்புவோருக்கு கடனுதவி அளிக்கப்படும் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வௌியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக அரசின் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்திற்கு, நடப்பு நிதியாண்டின் இலக்காக 195 மனுதாரர்களுக்கு மானியமாக வழங்க ரூ.1.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். பொது பிரிவினர் 35 வயதுக்குள்ளும், சிறப்பு பிரிவினரமர் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். குடும்பத்திற்கான ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதிகபட்சம் உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சம், சேவை மற்றும் வியாபாரத்திற்கும் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேர்காணல் மற்றும் பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. திட்ட மதிப்பில் 25 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூ 1.25 லட்சம் வழங்கப்படும்.
தகுதியுள்ள நபர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து விண்ணப்பத்தினை இரு நகல்களாக அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். மேலும். விவரங்கள் பெற பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் சிட்கோ தொழிற்பேட்டை காக்களுர் தபால் நிலையம் அருகில் திருவள்ளுர் தாலுகா என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044-27666787, 27663796 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாகவோ அணுகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.