முதல் முறையாக நடிகை ராஷ்மிகா ‘டாப் டக்கர்’ என்கிற கலர் ஃபுல் ஆல்பம் பாடலுக்கு, விதவிதமான உடையில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் ஆட்டம் போட்டுள்ள பாடல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் டிரின்டிங்கில் உள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த ஆல்பம் பாடலில், கடைசி சில நிமிடங்கள் ஹீரோ போல் வந்து கெத்து காட்டியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. பாட்ஷா என்பவர் எழுதியுள்ள இந்த பாடலை யுவன், உச்சனா அமித், ஜோனிதா காந்தி ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளனர்.
இந்த பாடலின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி, ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த ஆல்பம் பாடல் இன்று வெளியாகியுள்ளது. பாடல் முழுக்க திருவிழாவை போல் கலர் ஃபுல்லாக படமாக்கியுள்ளனர். அதிலும் விதவிதமான உடையில் ராஷ்மிகா வேற லெவல்.
ஏற்கனவே இந்த ஆல்பம் பாடலில் நடித்த அனுபவம் குறித்து ராஷ்மிகா கூறுகையில், இதில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகவும், கண்டிப்பாக அனைத்து தரப்பை சேர்ந்தவர்களுக்கும் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவர் கூறியது போலவே இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் வெளியாகியுள்ளது.