நேற்று:
இருள் விலகி ஒளி பரவ ஆரம்பிக்கும் நேரம் இருளைக் கண்டு பயந்து,
மரக்கிளைகளில் பதுங்கிக் கிடந்த பறவைகள் மீண்டும் உற்சாகம்
பெற்று கூச்சல் போட ஆரம்பித்திருந்தன. ஒன்றிரண்டு, வயதில் மூத்தப்
பறவைகள், கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, மெல்ல
ஒரு சுற்று பறந்து பார்த்து விட்டு, மீண்டும் கிளைகளில் அமர்ந்து
கொண்டு “இதோ வந்து விடும், விடிந்து விடும்” என்று தன்
குஞ்சுகளுக்கு நம்பிக்கையை ஊட்டிக் கொண்டிருந்தன.
அவ்வளவு அதிகாலையில் வந்து இறங்கியிருந்தார் மாமா.
வந்தவரை முழுமையாக வரவேற்கக் கூட விடாமல் தன்
வேண்டுகோளைத் திரும்பத் திரும்ப வைத்துக் கொண்டிருந்தார்
மாமா.
“தாயி! கொஞ்சம் நா சொல்றத கேளு தாயி!”
“இல்ல மாமா. என்னைய மன்னிச்சிகிடுங்க….எனக்கு அவரப்
பார்க்கவே பிடிக்கல”
“கொஞ்சம் மனசு வை அம்மணி…கிழவன் உன்னைய ஒரே ஒரு
தடவை பார்க்கணும்னு துடியா துடிக்கிறான். பெத்த மகளை
பார்க்கணும்னு அப்பன் நினைக்கறது தப்பா கண்ணு?”
“பெத்த மவங்ற நெனைப்பு அவருக்கு இருக்குதா என்ன?…..எம்
புருஷனை நடு ரோட்டுல போட்டு வெட்டனப்ப……அவரு துடியா
துடிச்சப்போ இந்த பாசமெல்லாம் எங்கன போச்சாம்? பெத்த
மகளையும் மாப்பிள்ளையையும் வெட்டி போட ஆளு
அனுப்பிச்சவருதானே அவரு…இப்ப மட்டும் என்ன பாசம் பொங்கி
வழியுதாம்? படு பாவி ராஸ்கோலுங்க …..அத்தனை பேரு
சூழந்துகிட்டு மாறி மாறி வெட்டுனானுன்களே…அத அவ்வளவு
சீக்கிரம் மறக்க முடியுமா மாமா?. இன்னைக்கும் ராவுல தூங்க
முடியாம நா துடிக்கிறது யாருக்கு மாமா தெரியும்? அந்த
கொலைகாரப் பாவியையா பாக்க சொல்றீங்க?” கண்கள் கலங்கி
கொப்புளிக்க கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டாள் வசந்தா.
மாமாவுக்கு மட்டும் தெரியாதா என்ன. இருந்தாலும் வாழ்க்கையில்
சில உறவுகள் விட்டுப் போய் விடக் கூடாது என்று நினைக்கும்
தலைமுறையைச் சேர்ந்தவர் அவர். “அம்மணி! நீ சொல்றது
2
அம்புட்டும் நெசம்தான்…இல்லங்கல….அது அந்த காலம்…ஜாதித்
திமிரு…..புத்தி மரத்து போச்சி….அதுக்குதான் உங்கப்பன் தண்டனை
அனுபவிச்சிட்டானே தாயி….அதப் போயி இப்ப
பேசிக்கிட்டிருக்கலாமா….அது ஆச்சுதே இருப்பத்தஞ்சு வருஷம்….. “
“எத்தனை வருஷம் வேணா ஆகட்டும் மாமா….போன உசுரு
போனதுதானே…இப்ப எம் புருஷனை உசிரோட கொண்டாந்து
குடுன்னா எங்கப்பன் கொடுக்குமா?” புடவைத் தலைப்பால் வாயைப்
பொத்திக் கொண்டு பொங்கி வந்த அழுகையை அடக்க முயற்சித்தாள்
வசந்தா. அந்த சோகம் இன்னும் அவளுக்குள் விரிந்து
படர்ந்திருந்தது. அது சோகமாகவும், பின் கோபமாகவும் மாறி மாறி
அவளை அலைகழித்துக் கொண்டுதான் இருந்தது.
“இங்க பாரு வசந்தா..நீ பேசறது சரியில்ல…ஆமா
சொல்லிபுட்டென்….பெத்த மகளை ஒரு தடவை
பாத்துபுட்டா…,உன்கிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டா…தான் செஞ்ச பாவம்
போயிடும்னு கெழவன் நினைக்கிறான்.. அதுல என்ன தப்பு
இருக்கு?.நீ கொஞ்சம் பெரிய மனசு பண்ணனும் தாயி. அவன்
கொஞ்சம் நிம்மதியாத்தான் உசுர விடட்டுமே? ஒரு நடை ஒடியா
தாயி…..ரெண்டு நிமிஷம் அங்கன நின்னுபுட்டு
ஓடியாந்துடலாம்….என்ன இருந்தாலும் அப்பன் இல்லியா?”
“இல்ல மாமா….அவரு எங்கப்பனே இல்ல..இங்கன நீங்க நின்னுகிட்டு
கோரிக்கை வெக்கறதுல எந்த பிரயோசனமும் இல்ல….தயவு செஞ்சி
போயிடுங்க…..எம் பொண்ணு இன்னைக்கி என்ன பாக்க வாரேன்னு
சொல்லியிருக்கு…..அவளுக்கு நடந்து போன எந்த விஷயமுமே
தெரியாது…..அதனால எதனாச்சும் சொல்லிக்கிட்டு இங்கன
இருக்காதீங்க…..கையெடுத்து கும்புட்டுக்கிறேன்…..போயிட்டு வாங்க…”.
அவளின் அந்த பேச்சு, அதிலிருந்த எரிச்சல் அவர் மனதில் வேறு
ஏதோ எண்ணத்தைத் தூண்டி விட துண்டை உதறித் தோளில்
போட்டு தீவிரமான சிந்தைனோடு கிளம்பினார் பெரியவர்.
“உம்…ஆனாலும் ரொம்பதான் பிடிவாதம் பிடிக்கிறே….சரி….நா என்ன
செய்ய….நடக்கறபடிக்கி நடக்கட்டும்….வாறன் தாயி!”
என்னவென்று சொல்ல முடியாத உணர்ச்சிகளோடு அவர்
போவதையே பார்த்துக் கொண்டு வெகு நேரம் அமர்ந்திருந்தாள்
வசந்தா. வழிந்த கண்ணீர் உறைந்து போய் இன்னுமொரு கோடு
போட்டது அந்த சுருங்கிய கன்னத்தில். நடந்து போன கோர
நிகழ்ச்சிகளை அவளால் மறக்கவே
முடியவில்லையே….எல்லாவற்றையும் மாற்றிவிடும் காலம் கூட
அவளின் அந்த ரணத்தை ஆற்ற வில்லை……
*****************
3
போன வாரம்:
அவளுடைய அனுபவத்திற்கு அது கொஞ்சம் பெரிய அறுவை
சிகிச்சைதான். இந்த சிறிய வயதில் அந்த அறுவை சிகிச்சையை
எந்த வித பயமோ, சிரமமோ இல்லாமல் டாக்டர் விமலா செய்து
முடித்ததை அந்த மருத்துவமனை பெருமையாகப் பார்த்தது. நிறைய
பேர் வந்து கை குலுக்கி விட்டு போனார்கள். அதுவும் பெரிய
டாக்டர்கள் எல்லாம் அப்படி வாழ்த்தியது அவளுக்கு மிகவும்
மகிழ்ச்சியாக இருந்தது. நோயாளி எழுபது வயதான ஒரு பெரியவர்.
நிறைய பரிசோதனைகளை செய்து பார்த்து விட்டு துணிந்து
செயலில் இறங்கி அவரின் உயிரைக் காப்பாற்றியது விமலாதான்.
இந்த அளவிற்கு பெரிய சிகிச்சையை அவள் மேற்கொள்ளுவது
முதல் முறை. மனத்திருப்தியுடன் தன் களைப்பை மறந்து சுடச் சுட
காபியை ஒரு கையில் ஏந்தியபடி மெல்ல தன் இருக்கையில்
சாய்ந்த விமலாவுக்கு உடனே அந்த எண்ணம் உதித்தது. “இந்த
வெற்றியை கொண்டாட வேண்டாமா? இந்த மகிழ்ச்சியை
அம்மாவோடு பகிர்ந்து கொள்ள வேண்டாமா?”
மனதில் வேகமாக வளர்ந்த எண்ணத்துடன் கையிலிருந்த
காபியையும் வேகமாக குடித்து முடித்தவள் முதல் வேலையாகத்
தன் கை பேசியை எடுத்தாள். ஆச்சரியம்! அம்மா சற்று முன்
அழைத்திருக்கிறாள்! என்ன ஒற்றுமை என்று வியந்து கொண்டாள்.
உடனே ஒரு பள்ளிச் சிறுமியைப் போல குதூகலத்துடன் அம்மாவை
அழைத்தாள். நான்கு ஐந்து முறை இசை ஒலித்தவுடன் எடுத்தாள்
அம்மா. பேச ஆரம்பித்த ஒரு நிமிடத்திற்குள்ளாகவே தன் தாயின்
குரலில் மிகுந்திருந்த தளர்ச்சியைத் தெரிந்து கொண்டாள் டாக்டர்
விமலா.
“விமலா! எனக்கு ஒன்னைய ஒடனே பாக்கணும் போல இருக்குடி..!”
“என்னம்மா இப்பிடி சொல்றே!? இப்பதானே பத்து நாளுக்கு முன்ன
பார்த்தோம்? எதுனா பிரச்னையாம்மா?”
“பிரச்னை எல்லாம் ஒண்ணும் இல்ல தாயி. எதுவோ உன்ன
பார்க்கணும் போல தோணிச்சி….அவ்வளவுதான்….”
“சரிம்மா! உன் மாப்பிள கிட்ட சொல்லிடறேன்….இன்னும் ஒரு வாரம்
பத்து நாள்ல கண்டிப்பா பார்க்கலாம். ஆனா….அம்மா நா சொல்ல
வந்த விஷயம் வேற…. இன்னிக்கி ஒரு முக்கியமான ஆபரேஷன்!”
“அப்பிடியா கண்ணு?! அது என்ன!” அம்மாவின் கேள்வியில் ஒன்றும்
பெரிய அளவில் சுவாரசியம் இல்லை.
“நான் டாக்டரானதுக்கு அப்பறம், மொத தடவையா ஒரு பெரிய
ஆபரேஷன் செஞ்ஜேம்மா. வெற்றி…வெற்றி…வெற்றிதான்…”
4
“உனக்கென்ன ராசாத்தி…இன்னும் பெரிய டாக்டரா வருவே!”
“என்னம்மா இது? என்ன ஆபரேஷன்னு கேக்க மாட்டியா?”
சிணுங்கினாள் செல்ல மகள்.
“நா என்னத்த கண்டேன் கண்ணு?! நீ சொன்னாலும் எனக்கு
வெளங்கவா போகுது?”
“கண்டிப்பா விளங்கும்மா. ஒரு பெரியவருக்கு சர்க்கரை வியாதி
ரொம்பவும் முத்திப் போயிடிச்சி…..”
“உம் சரி.”
அதற்குள் விமலாவுக்கு அழைப்பு வந்தது. பெரிய டாக்டர் நேரிலே
வரவே “அம்மா என்னைய கூப்படறாங்கம்மா! எல்லாத்தையும் நேர்ல
வந்து சொல்றேம்மா” என்று சொல்லி அவசரமாக கை பேசியை
அணைத்துத் தன் கை பையில் போட்டுக் கொண்டு எழுந்தாள்
விமலா.
இன்று:
விடாதே பிடி!
போடா! ஓடு! தப்ப வுடாதே!
போட்டு தள்றா! உம் ! சீக்கிரம்!
உதடுகள் முழுவதுமாக உலர்ந்து போக, உடல் தொப்பமாக நனைந்து
போக, ஒவ்வொரு நாடி நரம்பிலும் உயிர் பயம் எகிறி அடிக்க,
இதயம் வாய் வழியாக கீழே விழுந்து விட துடிக்க, ஓடிக் கொண்டே
இருந்தாள் வசந்தா. எந்த வினாடியும் அந்த குண்டர்கள் தன் மீது
பாய்ந்து விடுவார்கள் என்பது அவளுக்கு நன்றாகப் புரிந்தது. அதே
சமயம் ஒரு பக்கத்தில் தன் அன்புக் கணவனுக்கு என்ன ஆயிற்றோ
என்றும் அவள் மனம் துடித்தது. ஆயிற்று…..ஆயிற்று….கிட்டே…வெகு
அருகே வந்து விட்டார்கள். அவர்கள் கைகளில் இருந்த
வீச்சரிவாள்களை காற்றிலே வீசிக் கொண்டே வந்து விட்டார்கள்.
பிசாசுகளைப் போல வெறியுடன் நெருங்குகிறார்கள். ரத்தம் உறைந்து
போக, கால்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கொள்ள,
மூச்சிரைக்க புடவை தடுக்கி விட, “ஐயோ” என்று கத்தி
நடுங்கியபடியே தொப்பென்று கீழே விழுந்தாள் வசந்தா. “ஓ!” என்று
தன் சக்தி முழுவதையும் திரட்டிக் கத்தினாள்.
சட்டென்று விளக்கு எரிந்தது. படபடவென்று இதயம் அடித்துக்
5
கொள்ள, தலையை தலையணையிலிருந்து உயர்த்தினாள். தூங்கி
எழுந்த கண்களுடனும் தண்ணீர் பாட்டிலுடனும் நின்றிருந்தாள்
வேலைக்காரி. ஒரு வினாடி தன் கண்களை மூடித்திறந்து தனக்கு
என்னவாயிற்று என்று புரிந்து கொண்ட வசந்தா கடிகாரத்தை
நோக்கினாள். ஆறடிக்க இன்னும் பத்து நிமிஷம் இருந்தது. மெல்ல
தண்ணீர் பாட்டிலை வாங்கி, குளிர்ந்த நீரை வார்த்துக் கொண்டாள்.
காய்ந்து போயிருந்த தொண்டைக்கு அது இதமாக இருந்தது.
எதுவுமே நடவாதது போல, கதவைத் திறந்துக் கொண்டு அறையை
விட்டு ஒரு இயந்திரத்தைப் போல வெளியேறினாள் வேலை
செய்யும் பெண். அது அவளுக்குப் புதியது அல்லவே! இப்படி வசந்தா
நாளென்றும் பாராமல் இரவென்றும் பாராமல் கத்த
வில்லையென்றால்தான் அது அதிசயம். அடிக்கடி நடப்பதுதானே இது
! நடுத்தெருவில், பட்டப் பகலில் எல்லோரும் பார்க்க வசந்தாவின்
கணவன் துடிக்கத் துடிக்க வெட்டிக் கொல்லப்பட்ட பொழுது என்ன
நடக்கிறது என்று அவள் புரிந்து கொள்ளும் முன்னே இரண்டு
குண்டர்கள் அவளையும் நெருங்கினர் . காதலனுடன் ஓடி சென்ற
அந்த கால்கள் வெட்டப் பட்டன. அந்த தெருவே வேடிக்கைப்
பார்த்துக் கொண்டுதான் இருந்தது.
ஏறத்தாழ இருபத்து ஐந்து வருடங்களுக்குப் பிறகும் அவளால் அந்த
கோர நிகழ்ச்சியை மறக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளுமே அது
அன்றுதான் நடந்தைப் போலவே அவளுக்குத் தோன்றியது. அதுவும்
பெற்றவர்களே மகளையும் மருமகனையும் கொல்லத் துணிந்தது
கொடுமையிலும் கொடுமையல்லவா….பெற்ற மகளின் கால்களையே
வெட்டி எறியத் துணிவாளா ஒரு தாய்?! பத்து மாதம் சுமந்து பெற்ற
பெண்ணை விடவும் சாதி பெரியதாகி விட்டதே தன்னைப்
பெற்றவர்களுக்கு. கண்களை மூடி ஒரு வினாடி தன்னை ஆசுவாசப்
படுத்திக் கொண்டவள் பெருமூச்சு விட்டபடியே படுக்கையில் சாய்ந்து
வேதனையுடன் கண்களை மூடிக் கொண்டாள். மறுபடியும் சிறிது
நேரம் தூங்கலாமா என்று அவள் சோர்வுடன் எண்ணியபோது தன்
மகள் அன்று தன்னைப் பார்க்க வருவேன் என்று சொன்னது
நினைவுக்கு வரவே பரபரவென்று எழுந்தாள் வசந்தா.
பதினொரு மணி வாக்கில் வந்தாள் டாக்டர் விமலா. கூடவே வந்த
மாமாவை ஆச்சரியத்துடன் பார்த்தாள் வசந்தா. அவள் கண்களில்
கேள்விக்குறி. விமலாவின் முகத்தில் களை இல்லை. முகம்
இலேசாக வாடியிருந்தது. தன் சக்கர நாற்காலியை மெதுவாகத்
தள்ளிக் கொண்டு வந்தாள் வசந்தா. ஒரு சோர்வும் சோகமும்
வசந்தாவின் முகத்தில் அப்பியிருந்தன.
“வா தாயீ! மாப்பிள்ளை வரலியா?” என்று மகளை வரவேற்றாள்
வசந்தா. மாமா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தார்.
அவரின் முகத்தில் ஒரு சலனமும் இல்லை. வெற்றுப் பார்வைப்
6
பார்த்துக் கொண்டிருந்தார். இருவரையும் மாறி மாறி பார்த்துக்
கொண்டிருந்தாள் வசந்தா. திடீரென ஓவென அழுதபடியே தன்
தாயைக் கட்டிக் கொண்டாள் டாக்டர் விமலா.
“எவ்வளவோ பெரிய விஷயத்தை எங்கிட்ட இருந்து
மறைச்சிட்டம்மா! இப்பிடி எல்லாம் உன் வாழ்க்கையில
நடந்திருக்குன்னு எனக்கு தெரியாமையே போயிடிச்சே!”
மாமாதான் சொல்லியிருப்பார் என்று விமலாவுக்குப் புரிந்தது.
அவரை வெறுப்புடன் ஒரு பார்வை பார்த்து விட்டு, மெல்ல தன்
மகள் விமலாவின் தலையைக் கோதி விட்டாள். அவளின் அழுகை
நிற்க சிறிது நேரம் ஆயிற்று.
“விமலா! அந்த விசயமெல்லாம் உனக்குத் தெரியாமையே
இருக்கணும்னுதான் நான் அந்த ஊரை வுட்டுபோட்டு இந்த ஊருக்கு
வந்துட்டேன். என்ற மாமன்தான் சொல்லி போட்டாரு போல
இருக்கு!”
நிலைமையை உணர்ந்து மெல்ல கனைத்துக் கொண்டார் மாமா.
“தாயி! எனக்கு என்ன செய்யரதுன்னு தெரியல…உன்னைய
பார்க்கோணுமின்னு உங்கப்பன் துடிக்கறான்….நீயோ வர
மாட்டேங்கறே…..நீ உன் புள்ளையப் பத்தி சொல்லும் போதுதான்
எனக்கு தோணிச்சி….அட..மவளைப் பாக்க முடியலையின்னா
என்னா…..பேத்தி இருக்குதேன்னு தோணிச்சி….உன் புள்ள எங்கன
இருக்குதுன்னு தெரிஞ்சுப் பாத்தா…….அடக் கடவுளே…..உங்கப்பனுக்கு
ரெண்டு காலையும் எடுத்ததே உன் புள்ளதான்னு தெரிஞ்சிது….”
அந்த வார்த்தையைக் கேட்டவுடன் திடுக்கிட்டவளாய் நிமிர்ந்தாள்
வசந்தா.
“என்ன மாமா சொல்றீங்க?” என்று வெடித்தாள் வசந்தா.
“ஆமாம்மா…. போன வாரம் நா ஒரு பெரிய ஆபரேஷன்
செஞ்சேன்னு சொல்லல…..அது இதுதாம்மா….ஆனா….சத்தியமா அவரு
யாருன்னு தெரியாமதான் செஞ்சேம்மா. என்னைய நம்பு…..”
“உன்னைய நம்பாம வேற ஆரடி நா நம்பறது….?” என்று மகளை
வாரி அணைத்துக் கொண்டாள் வசந்தா.
“கடவுளு எப்படி போட்டாரு பாத்தியா தாயி! உன் காலு ரெண்டையும்
உங்கப்பன் வெட்டினான். அவன் கால உன் புள்ள வெட்டிடிச்சி…..”
“அய்யோ” என்று காதுகளைப் பொத்திக் கொண்டாள் வசந்தா. “மாமா
ரெண்டையும் சம்பந்தப் படுத்தி பேசாதீங்க….எங்கயன் காலை வெட்டி
உசுரை எடுத்தது பழி வாங்கறதுக்காக. . ஆனா எம் புள்ள கால
எடுத்தது ஒரு உசுரைக் காப்பாத்தி கொடுக்க. என்ற மக செஞ்சது
7
உசுரக் காப்பாத்தறதுக்காக…..அது வேற இது வேற மாமா…..” என்று
பொங்கியவள் தன் மகளை நோக்கித் திரும்பினாள்.
“உங்கப்பன் உசிரோட இருந்தா இத கேட்டு சந்தோசம்தான்
பட்டுருப்பாரு விமலா. அவரு நல்ல சென்மம்….அத்தனை இடத்துல
வெட்டு வாங்கி துடிக்க துடிக்க ஆஸ்பத்திரியில கெடந்த போது கூட
உங்க தாத்தாவைப் பத்தி எதுவுமே சொல்லலியாம். புள்ள மேல
இருக்கற ஆசையில அப்பன் எதுவோ பண்ணிடிச்சின்னுதான்
சொல்லிகிட்டிருந்தாரம்……அப்பேற்பட்ட மனுசனுக்கு உன்னைய
பாத்தா பெருமையாதான் இருக்கும் கண்ணு!”
எது பழி, எது பாவம், எதற்கு எது தண்டனை என்று புரியாமல்
பெரியவர்கள் பேசிக் கொள்வதை கண்ணீர் மல்கப் பார்த்துக்
கொண்டிருந்தாள் டாக்டர் விமலா. ஒன்று மட்டுமே அவளுக்குப்
புரிந்தது. விஞ்ஞானத்துக்கு மேலே ஏதோ ஒன்று இருக்கிறது என்பது