
சாப்பிடறதுக்கு முன்னாடி மறுபடியும் அந்த மொபைல் நம்பர்க்கு கால் பண்னா பிரியா. இப்பவும் ரிங் போல. கவலையா மொபைல்ல டேபிளில் தூக்கி போட்டா. அதை பாத்துக்கிட்டே இருந்த தேவி, என்னாச்சு? எதாவது பிரச்சனையா பிரியா? நானும் கொஞ்சம் நாளா பாக்குறேன் யாருக்கோ கால் பண்ற, லைன் கிடைக்காம அப்செட் ஆகி போனே வைக்கிற. சோசியல் மீடியா முழுக்க யாரையோ தேடுற. எங்கிட்ட சொல்லு பிரியா ப்ளீஸ்!. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே தேவி. இல்ல பிரியா கொஞ்ச நாளா நீ எதோ இழந்த மாதிரியே இருக்க. கேக்கலாமா வேணாமான்னு யோசிச்சிகிட்டயே இருக்கேன். தேவி கேட்டுகிட்டே இருக்கும் போது பிரியாவுக்கு கண்ணு கலங்குது. சொல்லு ப்ளஸ். கண்ண தொட முதலில். யாருகிட்ட பேச ட்ரை பண்ற? பிரியா கண்ணல வர கண்ணீர அடக்கிகிட்டயே என்னோட பேஷண்ட் ஒருத்தர் லேசர் ஆபரேஷன் பண்ண வரேன் சொல்லிட்டு போனாரு. அவருக்கு தான் ரெண்டு மாசமா ட்ரை பண்றேன் தேவி போன் கிடைக்கல. என்னது பேஷண்ட்யா? ஆபரேஷன் பண்ண விருப்பம் இருந்தா அவரை வர போறாரு. அதுக்கு நீ ஏன் அப்செட் ஆகுற பிரியா. ஆமா அட்மினை விட்டு பாலோஅப் பண்ண சொல்ல வேண்டியது தானே. அதுவும் இல்லாம உன்னோட பர்சனல் மொபைல் இருந்து கால் பண்ற. அப்படி யாரு முக்கியமான ஆளு? தேவியும் பிரியாவும் அந்த ஏரியால உள்ள ஹாஸ்பிடட்ல்ல கண் மருத்துவர்கள்.
பிரியா மெல்ல தேவிகிட்ட சொல்ல ஆரம்பித்தாள். மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு ஞாயிற்றுக்கிழமை. கண்ணு செக் பண்ண அறுபது பேர் மேல வந்து இருப்பாங்க. மூச்சு வீட கூட டைம் இல்லாம பிசியா இருந்தது. ஒரு மணிக்கு கரெக்டா கிளினிக்க கிளோஸ் பண்ண முடியல. நானும் விடாம பாத்துட்டு இருந்தேன். ரெண்டு மணி போல சுபா வந்து இன்னும் பத்து பேர் இருங்காங்க சொன்னாள். நானும் சரி சீக்கிரம் முடிச்சுரலாம் சொன்னேன். மேடம் லேசர் ஆபரேஷன் பற்றி கேட்க வந்த ஒருத்தர் மட்டும் நாளைக்கு ஈவினிங் அப்பாயிண்ட்மெண்ட் மாற்ற சொல்லுறாரு என்ன பண்ணலாம் கேட்டாள். அப்படியா என்ன ஆச்சு? இன்னைக்கு பெரிய டாக்டர் கூட கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பார். அவரு வெயிட் பண்ணா பெரிய டாக்டர் கூட செக் பண்ணிட்டு என்ன பண்ணலாம் சொல்லுவார். இரு சுபா நானே வந்து அவர்கிட்ட பேசுறேன். ரிசப்ஷன் கிட்ட அவன் நின்னுட்டு இருந்தான். சராசரி உயரம். பழைய ஹேர் ஸ்டைல். அவன் கேட்ட போயி என்ன ஆச்சு சார் கேட்டேன்? என்னோட கண்ண பார்த்து சொல்ல ஆரம்பிச்சான். லஞ்ச் டைம் மேடம். இப்பவே லேட்டா ஆயிட்டு. அம்மா சாப்டாம எனக்கு வெயிட் பண்ணுவாங்க மேடம். நீங்க எல்லாரும் கூட சாப்பிடாம கஷ்ட படுறிங்க சொன்னான். எனக்கு ஒன்னு பிரச்சனை இல்ல மேடம். நான் நாளைக்கு வரேன் சொன்னான். வியப்பா இருந்தது. இல்ல சார் இன்னும் முப்பது நிமிஷம் தான் சொன்னேன். இல்ல மேடம் அம்மா பாவம் சாப்பிடாம இருப்பாங்க சொன்னான். நீங்க வேணா போய் சாப்பிட்டு வாங்க சொன்னேன். சரி ஒரு யோசனை மேடம். சொல்லுங்கனு சொன்னேன். வயசு ஆனவங்க கூட இன்னும் இருக்காங்க. கொஞ்சம் நேரம் பிரேக் விடுங்க. நீங்களும் சாப்பிட்டு வாங்க. நாங்களும் சாப்பிட்டு வரோம் அவன் சொல்ல மிதி இருந்த அனைவரும் நல்ல யோசனை தம்பின்னு சொன்னாங்க. உண்மையே சொல்லனும்னா நாங்கயெல்லாம் கூட ரொம்ப பசியா சோர்வா இருந்தோம். சரி முப்பது நிமிஷம் பிரேக் அப்படினு சொல்லிட்டு அவனை பார்த்தேன். அவன் முகத்துல ரொம்ப சந்தோசம் தெரிஞ்சது. நன்றின்னு சாப்பிட போனான். எல்லாரும் பத்தி யோசிக்கிறான் நினைச்சுக்கிட்டேன். வீட்டுக்கு போயிடலாம்னு யாரும் லஞ்ச் கொண்டு வரல. எனக்கும் என்னோட அம்மா அப்பா தங்கை எல்லாரும் சாப்பிடாம எனக்கு வெயிட் பண்னுவாங்க அப்படினு நியாபகம் வந்தது. அம்மாக்கு கால் செஞ்சேன். தங்கச்சி தான் எடுத்தாள். ஹலோ டாக்டர் அக்கா பயங்கரமா பசிக்குது எங்க இருக்குனு கேட்டாள். இன்னும் ஹாஸ்பிடல் தாண்டி சொன்னேன்,எனக்கு வெயிட் பண்ண வேணாம் நீங்க சாப்பிடுங்க சொன்னேன். எல்லாம் நாளும் நான் போக ரொம்ப லேட்டா ஆயிடும். அவங்க பாவம் நான் வர வரைக்கும் எவ்வளவு நாள் பசியோடு இருந்து இருப்பாங்க. நான் டாக்டர் படிக்க என்னோட அம்மா அப்பா எல்லாரும் ரா பகலா கஷ்ட பட்டாங்க. சின்ன சின்ன விஷயம் கூட அப்பா அம்மாக்கு பாத்து பாத்து செய்யணும் அப்படினு நெனைச்சேன். அவன் முகம் அப்படியே முன்னாடி வந்தது.
ஹோட்டல்ல வாங்கி தான் எல்லாரும் சாப்பிட்டோம். சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த அப்பறம் மனசும் உடம்பும் சுறுசுறுப்பானது. அவன் நியாபகம் அதிகமா வந்தது. சந்தோசமா மூன்று பேர் பார்த்த அப்பறம் அவன். மனசு படபடன்னு அடிக்க ஆரம்பிச்சிது. என்ன பேச போறான் நான் எப்படி பேச போறேன் அப்படினு. உள்ளே வந்தான். நேரா விஷயத்துக்கு வந்தேன். சொல்லுங்க என்னை பிரச்சனை. என்னமோ அவனை எனக்கு பிடித்தது. கண்ண பார்த்து சொல்ல ஆரம்பிச்சான் அடிக்கடி ரொம்ப தலை முகம் எல்லாம் வலிக்குது. கொஞ்ச நாள் முன்னாடி பவர் செக் பண்ணி பாத்துட்டு கண்ணாடி போடணும் சொன்னாங்க சொன்னான். இருங்க சார் அப்படின்னு சொல்லிட்டு நானும் அவனுக்கு எல்லாம் டேஸ்டும் எடுத்தேன். சார் பவர் அதிகமா இருக்கு. கண்ணாடி கண்டிப்பா போடணும் சொன்னேன். கொஞ்சம் நேரம் அமைதியா இருந்தான். மேடம் என்னோட வேலையில் தூசி படற இடத்துக்கு போற மாதிரி இருக்கும். இப்ப கண்ணாடி போட்டுகிறேன். ஆனா கண் லேசர் சர்ஜரி பண்ணனும் என்ன பண்ணலாம் கேட்டான்.. சரி ஒன்னு பண்ணுங்க. அடுத்த தெருவில் எங்க ஹெட் கிளினிக் இருக்கு. எங்க ஹாஸ்ப்பிட்டல் ஹெட் டாக்டர் பாருங்க. உங்களுக்கு சரினா இன்னைக்கு சாயங்காலமே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தரேன் சொன்னேன். சரி மேடம் நான் போய் கண்ணாடி ஆர்டர் பண்ணறேன் சொல்லிட்டு போனான். கண்ணாடி ஆர்டர் பண்ணிட்டு வந்தான். என்னமோ எனக்கும் அவன் கூட போகணும் தோணிச்சு. நானும் வரேன் சார் சொன்னேன். அவன் முகத்தில் சந்தோசம் வந்ததை பெரிசா காட்டிக்காம சரி மேடம் சொன்னான். அங்க போனா ஹெட் டாக்டர் க்ரிட்டிக்கல் ஆபரேஷன்ல இருந்தாரு. இருவது பேர் மேல வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க.
பொதுவா பெரிய டாக்டர் ஞாயிற்றுக்கிழமை ஈவினிங் கொஞ்சம் பிரியா தான் இருப்பார். ஆபரேஷன் கூட இருக்காது. இன்னைக்கு தான் இப்படி இருக்கு அப்படினு நான் சொல்ல அவன் உடனை பரவாயில்லை மேடம் சொன்னான். காத்திருக்க ஆரம்பிச்சோம். ரொம்ப நேரம் ஆச்சு. எதுவும் பேசிக்கல. மேடம் எனக்கு எதாவது குடிக்கணும் போல இருக்கு. நீங்களும் வரிங்களா கேட்டான்? எனக்கு வேணாம் சார் சொன்னேன். ஆனால் அவன் கூட போகணும் போல இருந்தது. எனக்கே என்ன யோசிக்கிறோம் அப்படினு தெரியலை. பக்கத்துல இத கேட்டுட்டு இருந்த ஒரு வயசான தாத்தா தம்பி அது என்னோட மனைவி. ரொம்ப நேரமா வீட்டுக்கு போலாம் ஒரு மாதிரியா இருக்குனு சொல்லிட்டு இருக்கா. எங்களால அடிக்கடி அலைய முடியாது கொஞ்சம் நேரம் பொறுத்துக்கனு சொல்லிட்டு இருக்கேன். கூட்டுமா இருக்கறது பாத்துட்டு என்னோட மகன் எங்களை விட்டுட்டு வரேன் சொல்லிட்டு போனான். இன்னும் வரல . ஒரு காப்பியாவது வாங்கிட்டு வாங்கனு சொல்லிட்டு இருக்கா. எனக்கு கால் வலி என்ன பண்றதுன்னு தவிச்சு போயி உட்கார்ந்து இருந்தேன். கடவுள் உங்கள அனுப்புனா மாதிரி இருக்கு. ரெண்டு காபி வாங்கி தர முடியுமா கேட்டாரு? கண்டிப்பா சார் அப்படின்னு சொன்னான். நானும் அவன் கூட கிளம்பினேன். நீங்க எங்க மேடம்? ஹலோ சார் எப்படி எல்லாம் ஒரு ஆள வாங்கிட்டு வருவீங்க. ஹெல்ப் பண்றேன் சொன்னேன். நன்றி மேடம். அவங்களுக்கு வாங்கி குடுத்துட்டு நாங்க ரெண்டு பேரும் போனோம். காபி வாங்கிட்டு ஓரமா நின்னு குடிக்க ஆரம்பிச்சோம்.
எப்படி சார் இப்படி எல்லாம் ஹெல்ப் பண்ணறீங்க அப்படினு கேட்டேன்? நீங்க பண்ணலயா மேடம்? பாத்துகிட்டு தான் இருந்தேன் சொன்னான். என்ன பாத்திங்க கேட்டேன் சாப்பிடாம ஒரு நிமிஷம் கூட ரெஸ்ட் எடுக்காம ஒவ்வொரு பேஷண்ட்கிட்டயும் அன்பா அக்கறையா பாத்துக்கிட்டீங்க சொன்னான். மேடம் வாழ்க்கையில் ஒரேயொரு அடிப்படை தான். அடுத்துவங்களும் நம்பள மாதிரி தான். அவங்க தேவையும் நமக்கு இருக்குற மாதிரி தான். இத யோசிச்சியாலே சுயநலம் போயி எல்லாருக்கும் ஹெல்ப் பண்ண ஆரம்பிபோம். ஹெல்ப் பண்ணல கூட தொல்லை பண்ண மாட்டோம் அப்படினு அவன் சொல்ல கரெக்டா சொன்னிங்க நான் சொன்னேன்.. நிறைய பேசினோம். ஒரு வார்த்தை அவன் தப்பா பேசல. அவன் கூட இருக்கும்போது நான் சந்தோசமா சுதந்திரமா பாதுகாப்பா உணர்ந்தேன். என்னோட வாழ்நாள்ல மறக்க முடியாது. கண்ண பார்த்து பேசினான். வெட்கப்பட்டு அப்பப்ப தல குனிச்சுக்கிட்டான். அவணுக்கும் என்னை ரொம்ப பிடிச்சுயிருந்தது. ஆனா காட்டிகாம கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிட்டு இருந்தான். ஹெட் டாக்டரை பாத்துட்டு வந்தோம். எப்ப சார் கண்ணாடி கலெக்ட் பண்ண வரீங்க கேட்டேன்? நாலு நாளைக்கு அப்பறம் சொன்னான்.
மூணு நாள் கஷ்டப்பட்டு போனுச்சு. எப்ப அவனை பார்ப்பேன்னு இருந்தது. நாலாவது நாள் நைட் கிளினிக் கிளோஸ் பண்ணும் போது தான் கண்ணாடி வாங்க வந்தான். கண்ணாடி போட்டுட்டு என்கிட்டே வந்து காமிச்சான். உங்களால இனி உலகத்தை சரியாய் பார்க்க போறேன்னு மேடம் சொன்னான். என்னால கண்ட்ரோல் பண்ண முடியாம நான் உண் கண்ணாய் வாழ்க்கை முழுவதும் உன்னோட இருக்கணும் சொல்லிட்டேன். அவன் அமைதியா இருந்துட்டு என்ன சொன்னனீங்க மேடம் கேட்டான். நான் உடனை இந்த கண்ணாடி உங்கள் கண்ணாய் இருக்கும்னு சொன்னேன். ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுயிருந்தது ஆனால் ஏதோ சொல்ல மறுக்குது. இது என்னோட பர்சனல் நம்பர். உங்களுக்கு எதாவது கண் பிரச்சனை அப்படினா கால் பண்ணலாம் அப்படினு குடுத்தேன். நன்றி மேடம் சொன்னான். சீக்கிரம் ஆபரேஷன் பண்ண வரேன் சொன்னான்.
இது வர ஒரு கால் இல்ல மெசேஜ் இல்ல அவங்கிட்ட இருந்து. அவனை ரொம்ப மிஸ் பண்றேன். இனிமே அவனை பார்ப்பேன்னு நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா போகுது தேவி . எப்படியாது அவனை காண்டாக்ட் பண்ண சோசியல் மீடியா எல்லாம் ட்ரை பண்ணறேன் முடியல. கவலை படாதே பிரியா கண்டிப்பா இந்த ராணியை தேடி அவன் வருவான்.
ஒரு வாரமா பிரியாவும் தேவியும் அந்த நம்பருக்கு ட்ரை பண்ணிட்டு இருந்தாங்க. ஒரு திங்கள்கிழமை காலை தேவி பிரியா கிட்ட வந்து மார்னிங் கால் பண்ணி பாத்தியா கேட்டாள். இப்ப தான் பண்ண போறேன் அப்படினு பிரியா சொன்னாள் . சீக்கிரம். ஹ்ம்ம் அப்படினு பிரியா கால் பண்ணா. ஹே கால் போகுதுடி குதிக்க ஆரம்பிச்சா பிரியா. கட் பண்றான். இன்னொரு வாட்டி ட்ரை பன்னு பிரியா. இல்ல கட் பண்றான். உன்னோட நம்பரை செவ் பண்ணி இருக்கானா தெரியலையே பிரியா?
சரி மெசேஜ் பண்ணு பிரியா அப்படினு தேவி சொல்லிட்டு இருக்கும் பொது அவன்கிட்ட இருந்து மெசேஜ் வந்தது. எப்படி இருக்கீங்க மேடம்? என்னை நியாபகம் வச்சு கால் பண்ணது ரொம்ப சந்தோசமா இருக்கு. நான் மீட்டிங்கில் இருக்கேன் அப்படினு அனுப்பினான். பிரியாவுக்கு சந்தோசம் தாங்க முடியல கூட கோவம் சேர்ந்து வந்தது. எத்தனை வாட்டி சார் ட்ரை பண்றது. ஒரு கால் இல்ல மெசேஜ் இல்ல இவ்வளவு நாளா எங்க போனீங்க? திட்டி மெசேஜ் பண்ணா. தேவி பிரியாகிட்ட ஹே நீங்கள் இன்னும் லவர் இல்லை. அதுக்குள்ள திட்டி மெசேஜ் பண்ற அப்படின்னு கேக்க பிரியா தேவிகிட்ட இருடி சொல்ல ரிப்ளை மெசேஜ் வந்தது. சாரி மேடம். நான் ஜெர்மனி ஆஃபிஸில் ட்ரிப் போயிட்டேன் அதனால தான் காண்டாக்ட் பண்ண முடியல. இந்த ஞாயிற்றுக்கிழமை கிளினிக் வரேன் மேடம் ஆபரேஷன் பத்தி பேச. பிரியாவுக்கு சந்தோஷத்துல கண்ணு கலங்க ஆரம்பிச்சது. தேவி எனக்கு அவனை ரொம்ப ரொம்ப பிடிச்சருக்கு. அவனக்கும் என்னை பிடிக்குமா அப்படினு தெரியாது ஆனா இப்போதுக்கு அவனை பாக்க போறேன் அப்படினு
சந்தோசம் போதும் அப்படினு பிரியா துள்ளி குதிக்க ஆரம்பிச்சாள்.