அன்பைக் கொன்று விட்டு
எதை விளையச்
செய்யப் போகிறீர்கள்?
உறவுகளைப் பகைத்துக்
கொண்டு எதை அள்ளிக்
கொள்ளப்போகிறீர்கள்?
வக்கிரங்களைச் சுமந்து
யாருடைய வாழ்வைச்
சிதைக்கப் போகிறீர்கள்?
இளைப்பாற ஓடி வருபவனுக்கு
கசப்புக் காடி
தருதல் முறைதானோ?
வாழ்வை அர்த்தப்படுத்துங்கள்.
போகும் போது எதுவுமே
இருக்காது, நீங்கள் உட்பட.
– சொற்கோ
கவிதையை சுவாசியுங்கள் : அதோ அவள் வருகிறாள்……




