
அனைவரையும் வணங்கி என் வாழ்வில் நடந்தச் சம்பவம், நான் சந்தித்தக் கதாபாத்திரம் என அனைத்தையும் கலந்து சமர்பிக்கிறேன்.
ஆதரவளியுங்கள் அன்பர்களே!
வண்ணங்கள் பலவாயினும் சொல்வதென்னமோ ஒரு பெயரை தான் அதான் “வானவில்”! வாழ்வும் அதுபோல் தான் எத்தன எத்தன பரிமானம்,கனவுகள்,கற்பனைகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் தோல்வி அழுகை சிரிப்பு கண்ணீர் என நொடிக்கு நிமிடத்திற்கு நாளுக்கு என விதமானதாய் அமைந்தாலும் பொதுவா “விதி” எனும் வார்த்தைல சகலமும் சப்தமின்றி மூர்ச்சை யாகிவிடுகிறது. கண்கொட்டாமல் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் உள்ளது காலம். அது சரியானத் தருணத்தை நோக்கி காத்திருந்து மீனை கொத்தும் கொக்கை போல சரியான தருணத்தில் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளது. தன் வேளை வரும்போது சிறப்பாக முழுசா அதன் வேலைய செய்யும் என்ற கனவை நம்பி தன் பாரத்தையெல்லாம் ஏதோ இருட்டறை யில் குறுட்டு பூனைப்போல் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு அன்றாட பொழப்ப நோக்கி ஓடும் ஒரு சராசரியான வறுமைக்கோட்டிற்கீழுள்ள சாமானியனாக நானும் விதி வழியே போகிறேன். ஏழைகளின் வசதி அவர்களின் தூக்க கனவில் தானே; ஏனோ தெரில தூக்கம் தான் வரலை. என்னத்தான் டீ.வி ஃபேன் தொகுப்புவீடு அடுப்புனு இலவசமா கொடுத்தாலும் அடுத்த வேலை சோத்துக்கு ஏழைகள் படும் வேதனையை வார்த்தைல விவரிக்கமுடியாது. தேதி பத்தானதும் காலைல காலுல சுடுநிரை ஊத்திட்டு வந்தது போல் வீட்டு வாசலில் சைரானடிக்கும் குழுக்காரனுக்கு என்ன பதிலை சொல்வது எனயோசித்தே தலைமுடி பாதி கொட்டிவிடுகிறது. அப்பப்போ அக்கம்பக்கம் வாங்கி ஓரளவு சமாளித்த நிலமையும் கடனை அடைப்பதை எண்ணி தூக்கமெல்லாம் தூக்கிலிடப்பட்டுவிடும். நீண்ட பெருமூச்சு தான் வருகிறது எப்படியோ ஏதோ படித்துவிட்டு அரசு வேலைக்கு தேர்வையும் எழுதி தேர்வின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் ஏழைக்கெல்லாம் இக்காலம் எட்டாக்கனி போல் அமைத்துவிட்டது அரசு வேலையை. பணபலம் ஆள்பலம் கொண்டவர்கள் சிபாரிசு லஞ்சம் என காரியத்தை சாதித்துக்கொள்ள, ஏமாந்த ஏழைபாழைகள் கடசிவரை காத்திருக்கும் நிலையை எண்ணி படைத்தவன் மேல் கோவம் தான் வருகிறது. அடிமனதில் நாட்டிற்கும் வீட்டிற்கும் ஏதாச்சும் பெருசா செய்யனும்ற ஆசை அவ்வபோது துளிர்விடும். வறுமையும் சந்தர்ப்பமும் ஒன்றோடொன்று போட்டியிட்டு புறனியிலடித்து தள்ள இறைவனை நொந்தபடி அடுத்தது நோக்கி என் கையாலாகாத தனத்தையெண்ணி நகர்ந்து செல்கிறேன். கோவில் செல்வதையெல்லாம் முற்றிலும் தவிர்த்துவிட்டேன் என் குறைய கூறியதாலோ என்னமோ கடவுளே கல்லாகி காட்சியளிக்கிறார். சிறுவயது முதலே அடிமைத்தனமாய் வளர்ந்ததாலோ என்னவோ எதையும் தைரியமா செய்யுற மனநிலை எனக்கில்லை. யாரேனும் அழுதால் கண்டும் காணாதுபோல் கடந்து செல்லும் கல்நெஞ்சுமில்லை. குடிபோதையில் காட்டுதனமாய் கோபக்கார அப்பாவிற்கும் அழுது தன் இயலாமையை கடவுளிடம் புலம்பும் தாயுக்குடையே வளர்ந்த என்னால் பெரிதாக எம்மாற்றத்தையும் என்னுள் கொண்டுவர இயலவில்லை. திருமண பந்தம் வாழ்வு கும்பல் இதிலிருந்து விலகி தனிமையில் ஆன்மீக வழியை தான் நாடுகிறது மனசு. பயந்த சுபாவமூம் தாழ்வுமனபான்மையும் தனித்துவிடப்பட்ட நிலையும் தான் பெரும்பாலும் ஆதரவாக அமைந்தது.
சிறுவயது முதலே எனக்கு சமூக சேவையில் ஆர்வம் அதிகம். அதற்கு காரணமே நான் படித்த பள்ளியில் எங்களுக்கு தமிழை கற்பித்த ஆசிரியை தான். மிகுந்த திறமைசாலி. அன்பானவர். தன் திருமண பந்தத்தில் தனக்கென ஒரு குழந்தை இல்லையென்பதால் இச்சமூகத்தின் வசையெல்லாம் தன்னை குத்தி கிழித்து ரணமாக்கிய போதும் தன் மாணவர்கள் மீது பாசமான தாயாக அரவணைத்து மகிழ்ந்த தாய் அவர். எப்போதுமே சைக்கிள் ல தான் வருவார். யாருமே கண்டும் காணாதுபோல் கடந்து சென்றாலும் எத்தன அவசர வேலையாக இருந்தாலும் சைக்கிளை நிறுத்தி மூடாமல் வீணாகும் குடிநீர் குழாயையும் விடிந்தும் அனைக்கபடாத தெருவிளக்கையும் நிறுத்திவிட்டு போகும் அவரின் அந்த சமுக பொறுப்பு தான் எனக்குள் வித்தானது. கண்களில் பெருகிய நீரை துடைத்து விட்டு நீண்ட பெருமூச்சுடன் மறுநாள் விடியலை எண்ணி செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டவாறே பொழுதும் புலர்ந்தது. தெருமுனைக்கோவிலில் ரேடியோ சினுங்க காலியான குடத்தை வாரிக்கொண்டு ஓடிய போதும் அதற்குள் சிரித்தன ஏற்கனவே அங்கு காத்திருக்கும் காலி குடங்கள்!. ச்ச என்றுதான் தீரும் இத்தண்ணீர் தாகம் என நொந்தப்படியே எப்பேர்பாடுபட்டு ஒருவழியா தண்ணீர் புடிச்சிட்டு வரும்போது தான் பார்த்தேன்
உலகில் மிகவும் அதிசயம் ஆச்சர்யம் மிக்கதென்று ஒன்று இருந்தால் அது நமது அரசாங்கமாகத்தான் இருக்கும். எந்த அரசாங்கம் மரத்தை வளர்ப்போம் என்கிறதோ அதுதான் மரத்தை அழித்து சாலையை அகலப்படுத்துது. மழைவளம் மண்வளம் என்கிறதோ அதுவே குவாரி அமைத்து மண்ணை விற்கிறது. மலையை குடைந்து தரைமட்டமாக்குவதென்பதும்; மழை வெள்ளத்தை சிறு நீரோடையாக்குவதும் எளிது ஆனால் ஆயிரமாயிரம் கற்களை அடுக்கினாலும் இயற்கையை போலொரு மலையை கொடுக்க இயலாது மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய அரசாங்கமே இப்படி செய்தால் மக்களை கேட்கவா வேணும் என தன்னுள் ஏகப்பட்ட கொந்தளிப்பையெல்லாம் வெற்று பார்வையில் புலம்பி கொட்டுவதை தவிர்த்து வேறுவழியில்லை: நானும் சிறுசிறு பூஞ்செடி கொடி பழவிதையை நட்டுவைத்து பராமரிக்கிறேன் போட்டிப்போட்டுக்கொண்டு நகராட்சிக்காரனும் நல்லா இருக்குற ரோட்டையும் பேத்து குண்டும் குழியுமாக அலங்கோலம் படுத்துவதை கூட கேக்க நேரமின்றி வாழும் அவசர காலத்தில் தான் நானும் பயணிக்கிறோமென்பதே காற்றில் ஆடும் ஜன்னல் போல் பதறுகிறது. அனைத்தையும் சகித்துக்கொண்டு சிலநேரம் குருடாகவும் செவிடாகவும் தான் பயணிக்க வேண்டியுள்ளது காரணமே அப்பாவின் முன்கோவமும் மூர்க்கதனமும் தான். எப்படியோ ஒருவழியா தற்சமயம் வயற்றுபொழப்புக்கும் குடும்ப வறுமையை போக்கவும் ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதுமென்றே தோணியது. போட்டியும் பொறாமையும் நிறைந்த இவ்வுலகில் எம்போன்றோரை எள்ளி நகைத்து கேலிகிண்டலடிக்கவே சிலர் இருக்க தான் செய்கிறார் எங்கு தேடியும் வேலை கிடைத்தபாடில்லை மாறாக ஆள் பார்க்க ஒரு மார்க்கமா இருக்கனு கிண்டல் தான் முதலில் வருகிறது. திறமைக்கெல்லாம் மதிப்பேயில்லை. என்ன செய்வது எல்லாமே விதி என நொந்துவிட்ட பிறகு மிச்சமானதென்னவோ அவமானங்கள் மட்டுமே.! எந்த வேலையானாலும் செய்ய தயாரான போதுதான் பொக்கிஷம் போல் அமைந்தது அந்த தொண்டுநிறுவனத்தில் கிடைத்த வேலை. பல நாளாக பட்டினி கிடந்தவனுக்கு கிடைத்த பாயாசம் போல் இத்தனை வருடமாக என்னுள் கிளைவிட்டு வேரூன்றியிருந்த பட்டுபோன சேவைமனதிற்கு அமுதூற்றானதாய் இருந்து. நோய்கள் குறித்து விழிப்புணர்வு , பாதிக்கப்பட்டோருக்கு சேவை என அந்த வேலையில் முழுவதும் எனை மறந்து மூழ்கி நீந்தினேன். மனதிற்கு அப்படியொரு நிம்மதியை அளித்தது. ஆயிரம் கனவுகள் கற்பனைகள் எதிர்பார்ப்புகள் என அத்தனையும் சுமந்து கொண்டு பயணிக்க துவங்குகிறேன் வாழ்வின் அன்றாட தேவைக்கும் பிரட்சனைக்குமிடையே நாளை முளைக்கும் வெள்ளியெனும் விடியலை நோக்கி.
நன்றி!




