கதவுகள் தட தடவென தட்டும் சத்தம்.
யாராது விடியற்காலை 3 மணிக்கு என குமுதா கண்ணை கசக்கிக் கொண்டே கதவை திறந்தாள்.
“மாமி, மாமி” என்ற குரல் அவளின் தூக்கத்தை மொத்தமாக கலைத்தது.
மருமகன் இராமின் குரல்…. என்னாச்சு மகள் சீதாவிற்கு ஏதாவது உடல்நிலை சரியில்லையா? இல்லை பேரன் கார்த்திக், சூரியாவிற்கா என ஒரு கணத்தில் மன ஒட்டம் ஒட யோசித்துக் கொண்டே கதவை திறந்தாள்
தோளில் கார்த்திகையும் கையில் சூரியாவையும் பிடித்துக் கொண்டு கலக்கத்தில் மருமகன் நின்று கொண்டு இருந்தான்.
“மாப்பிள்ளை என்ன இந்த நேரத்தில். சீதா எங்கே?” என்ற மாமியாருக்கு பதில் எதும் சொல்லாமல். சூரியா தம்பியை அழைத்துக் கொண்டு உள்ளே போ நான் அம்மாவை கூப்பிட்டுக் கொண்டு வருகிறேன்..”.
சூரியா தம்பியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்
“மாப்பிள்ளை என்ன மாப்பிள்ளை, சீதாவிற்கு என்ன ஆச்சுங்க மாப்பிள்ளை. ” சீதா எங்கே? இந்த நேரத்தில் எங்கே போனாள். நீங்க மட்டும் வந்து இருக்கீங்க?”
“பதில் எதும் சொல்லாமல்”, உள்ளே வாங்க அத்தை என வீட்டிற்குள் வந்தவுடன், சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்து இந்த சீட்டை எழுதி வைத்து விட்டு, “சீதா ஓடி போய் விட்டாள்” அத்தை என சொல்லி முடிப்பதற்குள் தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதற ஆரம்பித்தாள் குமுதா…
“அத்தை, அத்தை கூச்சல் போடாதீங்க.. பசங்களுக்கு எதுவும் தெரியாது. அம்மா ஆஸ்பத்திரிக்கு போய் இருக்காங்க என்று சொல்லி இருக்கிறேன்”.
“நான் கோயம்பேடு வரை போய் பார்த்து விட்டு வருகிறேன். பசங்களை பார்த்துக் கொள்ளுங்கள் என வேகமாக கிளம்பினான்.
பதட்டத்தோடு அந்த சீட்டை பிரித்து படிக்க ஆரம்பித்தாள் குமுதா,,,,,
அன்பு மாமவிற்கு,
மாமா தங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நம் குழந்தைகள் தான் என் உயிர். ஆனால் என்னவோ தெரியவில்லை மாமா உன் நண்பன் லிங்கேஸ்வரன் நம் வீட்டிற்கு வர வர என்னிடத்தில் மாற்றம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் அவன் பார்வை சரியில்லை என நான் உன்னிடம் சொன்னேன் மாமா. நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லை. நாளடைவில் எனது புத்தி பேதலிக்க ஆரம்பித்தது. பிறகு அது பிடித்து விட்டது மாமா. இதோ இன்று என் உயிரான உங்களையும் பிள்ளைகளையும் விட்டு லிங்கேஸ்வரனுடன் போகிறேன், காரணம் எனக்கே தெரியவில்லை மாமா. மன்னித்து விடவும். குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும்.
இப்படிக்கு
சீதா
இதை படிக்க படிக்க குமுதாவின் ஈரகுலை அறுபடுவதை போல் இருந்தது.
‘பாவி மகள் இப்படி செய்து விட்டாளே’. தங்கமான மாப்பிள்ளைக்கு துரோகம் செய்ய எப்படி மனம் வந்தது இந்த நாயிக்கு. புள்ளைங்க என்ன செய்வாங்க.
ரூமில கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கும் குழந்தைகளை பார்த்தவுடன் சத்தம் வராமல் வந்த அழுகையை அடக்கிக் கொண்டு வெளியே வந்தாள்
பெண்ணை ஒழுங்காக தானே வளர்த்தோம்.
குமுதாவின் நினைவுகள் சற்றே பின்நோக்கி சென்றது. கணவன் குமரேசன் கட்டிட தொழிலாளி.
குமுதாவும் அங்கு சித்தாள் வேலை தான் செய்து வந்தாள். ஓரே மகள் சீதா. அன்றைய தின வருமானத்தில் வாழ்க்கை ஓடிக் கொண்டு இருந்தது. ஒரு நாள் தனது கணவனுக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதை பார்த்து உடைந்து போனாள். அந்த கனமே அவன் கட்டிய தாலியை கழற்றி அவன் முகத்தில் வீசிவிட்டு “இனி உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வீட்டு பக்கம் வந்துவிடாதே” என சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் வந்தாள்.
பள்ளியில் இருந்து வந்த மகளிடம் அப்பா செத்து விட்டார். இனி உனக்கு எல்லாமே இந்த அம்மா தான் என்றாள்
கட்டிட வேலை செய்வது கடினமாக இருந்தது குமுதாவிற்கு. பல அடுக்கங்களால் சூழப்பட்டது பாடி புது நகர். அந்த பகுதியில் நல்ல தண்ணீர் இல்லை. அதுவே பல சிறு குடும்பங்களுக்கு ஒரு வருவாய் உண்டாக்கும் விதமாக இருந்ததது. வீட்டு வேலை செய்வதும் ஒரு நல்ல வருமானத்தை தந்தது. ஓய்வின்றி உழைத்தாள் குமுதா.
மகள் சீதா தான் உலகம். அவளை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தாள்.
சீதாவும் அம்மாவின் கஷ்டம் அறிந்து பொறுப்போடு படித்தாள். அவளுக்கும் அம்மா தான் உலகம். வீதியில் தலை நிமிர்ந்துக் கூட நடக்க மாட்டாள். அதிர்ந்து பேச மாட்டாள். பார்க்க கண்ணுக்கு லட்சணமாக இருப்பாள். மாநிறம் தான்.
மேலே படிக்க வைக்க வரூமானம் போதவில்லை. சீதாவை லெதர் நிறுவனத்தில் டெய்லராக வேலைக்கு சேர்த்து விட்டாள் குமுதா. லெதர் நிறுவனத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்கள் வேலைக்கு போவது இப்போது சகஜமாகிவிட்டது.
சீதாவின் அமைதி அங்கு வேலை பார்த்த பல இளவட்டங்களை கவர்ந்தது. ஆனால் எந்த ஒரு கவர்தலிலும் அகப்படாமல் வெளியே வந்தாள் சீதா.
“பாட்டி அம்மா எங்கே?” என கார்த்திக்கின் குரல் அவளது நினைவை திருப்பின…
அம்மா வந்துடுவாங்க செல்லம். இங்க வா பாட்டி மடியில் படுத்துக்கொள் என அவனின் தலையை வருடியபடி “அப்படிடபட்ட பெண்ணிற்கு இப்ப என்னாச்சு? “ ஒன்றும் புரியாமல் குழந்தைகளை பார்த்த வண்ணம் இருந்தாள் குமுதா.
*****
வெளியே வந்த இராமனுக்கு பல எண்ண ஓட்டங்கள்.
அம்மா அப்பா பார்த்த பெண் தான் சீதா, அதிலும் குமுதாவின் மேல் மிகவும் மரியாதை அவனுடைய அம்மாவிற்கு. ஒத்த பொம்பளையா இருந்துக் கொண்டு பொண்ணை தங்கமா வளர்த்து இருக்கா.
இராமின் அப்பா சீதா வேலை செய்யும் நிறுவனத்தில் அவளை பற்றி விசாரிக்க அனைவரும் தங்கமான பொண்ணு என்றே சான்றிதழ் அளித்தார்கள். இராமிற்கு இந்த விசாரனையில் விருப்பமே இல்லை.
அப்பா, “ஏன் இப்படி செய்றிங்க..?” என கோபித்துக் கொண்டான்.
” டேய் இது எல்லா வீட்டிலும் திருமணம் அப்போ செய்றது தான்… நீ பேசாம போ என்றவரை “நீங்க திருந்தவே மாட்டிங்களா?” என்ற அப்பா மகன் விவாதத்தை அம்மா தான் வந்து சமாதானம் செய்தாள். சரி சரி போப்பா….. எல்லாம் நல்ல படி நடக்கும் என்று…
திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்தது
தனது சொந்தங்கள் மற்றும் தனது வீதியில் இருக்கும் அனைவரும் வியக்கும் வண்ணம் சீதாவின் திருமணத்தை நடத்தினாள் குமுதா
இராமின் அப்பா அம்மா அவர்கள் இருவரும் தங்கும்படி பாடி குப்பம் வீதியில் ஒரு வீட்டை பார்த்து பால் காய்ச்சி குடி வைத்தார்கள்.
திருமணம் முடிந்த இரண்டு வருடத்தில் இரண்டு மகன்கள். சூரியா கார்த்திக். குமுதா அம்மாவிற்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
வருடம் ஒரு முறை சுற்றுலா. மாதம் ஒரு முறை சினிமா என வாழ்க்கை நிம்மதியாக கடந்தது.
அன்று அவர்கள் நான்காம் வருட திருமணம் நாள்.
சீதா உனக்கு பிடித்த கொலுசு எப்படி இருக்கு?
“மாமா போன வருடம் பிறந்த நாளிற்கு தானே வாங்கி கொடுத்திங்க” என்ற மனைவியை கட்டி அனைத்து பரவாயில்லை மா . அதை எடுத்து வைச்சுடு…… இதை போட்டுக்க….இன்னிக்கு கல்யாண நாள் இல்லை’
இரு…இரு நானே என் செல்லத்திற்கு போட்டு விடுகிறேன் என்ற கணவனை நான் ரொம்ப கொடுத்து வைச்சிருக்கேன் மாமா என்றாள்….
மண்டு நான் தான் கொடுத்து வைச்சிருக்கேன்
சரி கிளம்புங்க உனக்கு பிடித்த பெருமாள் கோயிலுக்கு போகலாம்.
பிள்ளைகள் அப்பா பீச்சுக்கு போகலாம்.
சரி பா. கோயிலுக்கு போய்விட்டு பீச்சிக்கு போகலாம். என்றான்.
அன்று கோயிலில் தான் லிங்கத்தை இவர்கள் சந்தித்தார்கள்.
“டேய் இராம் எப்படி டா இருக்கே?” பார்த்து பல வருடங்கள் ஆச்சு
“நல்லாயிருக்கேன் டா மச்சான். நீ எப்படி இருக்க? “
“எனக்கு என்னடா.” இராஜா மாதிரி இருக்கேன்
என் மனைவி சீதா இவர்கள் என் பிள்ளைகள் சூரியா கார்த்திக்…. என அறிமுகம் செய்து வைத்தான்.
“வணக்கங்க” என்றான்.
இவன் என் உயிர் நண்பன் லிங்கம். நாங்கள் இருவரும் ஒன்றாக காலேஜ் வரை படித்தோம். அதன் பின்னர் இப்ப தான் பார்க்கிறோம்..
“டேய் மாப்பிள்ளைங்களா…..என பிள்ளைகள் இருவரையும் கொஞ்ச ஆரம்பித்தான், “லிங்கம்
“உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா டா….” லிங்கம் .என்று கேட்ட இராமை பார்த்து, “இல்லை டா… நான் அந்த ரிஸ்க் எல்லாம் எடுக்கவில்லை” என சொல்லி கொண்டே கீழ் கண்களால் சீதாவை நோட்டம் விட்டான்.
சீதா அதை உணர்ந்துக் கொண்டாள்.
“நீங்க பேசிக்கிட்டு இருங்கள். நானும் பிள்ளைகளும் கோயிலை சுற்றி வருகிறோம்” என கிளம்பினாள்
நண்பர்கள் இருவரும் பல வருட பிரிவினை ஒரே சந்திப்பில் பேசி திர்த்தார்க்ள்.
கார்த்திக் ஒடி வந்து அப்பா அம்மா கூப்பிடுறாங்க… வாங்க போகலாம் என்றான்.
நண்பனிடம் வீட்டு முகவரி கொடுத்துவிட்டு கிளம்பினான்.
****
அதன் பின்னர் லிங்கம் வீட்டிற்கு வருவது தொடர்ந்தது.
சீதா , மாமா எனக்கு என்னமோ இது சரியாக படவில்லை, உங்கள் நண்பர்கள் நீங்கள் வீட்டுக்கு கூப்பிடாதிங்க மாமா என சொல்லி சொல்லி அலுத்து விட்டாள்.
“யார சொல்ர மா? “
அந்த “லிங்கத்தை”
சீ அவன் ரொம்ப நல்லவன் மா.. நல்ல பையன். “ பாவம் இங்கு சென்னையில் அவனுக்கு யாரும் இல்லை. நம்ம பசங்களை அவனுக்கு பிடிச்சிருக்கு. அதனால் தான் வரான். “நீ எதுவும் யோசிக்காமல்…போய் சாப்பாடு எடுத்து வை…என வாய் அடைத்தான்..”
பிறகு அவள் சொல்வதை நிறுத்திக் கொண்டாள்’
இராமிற்கு லிங்கத்தை சீதா புரிந்துக் கொண்டாள் என மகிழ்ச்சியாக இருந்தான்
பின்னர் லிங்கம் ஒரு குடும்ப உறுப்பினராகவே ஆகிவிட்டான்.
ஒரு பலமான கூச்சல் அவன் நினைவலையை திருப்பியது….
டேய் சாவு கிராக்கி வண்டியை ஒழங்கா ஒட்ஞிக்கிட்டு போ…. என வீட்டில சொல்லிட்டு வந்துட்டியா…
சட்டென்று நினைவு வந்தவனாக வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு கோயம்பேடு முழுவதும் தேடி பார்த்தவனுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.
*****
இரண்டு நாள் இரண்டு யுகமாக கழிந்தது.
அம்மா எங்கே என கேட்கும் பிள்ளைகளுக்கு அம்மாவிற்கு உடம்பு சரியில்லை இரண்டு நாட்களில் வந்திடுவான் என சொல்லி சமாளித்தாள் குமுதா.
அரசல் புரசலாக வீதி முழுவதும் செய்தி பரவியது. இராமின் அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அம்மா தங்கை வீட்டில் இருந்தாள். செய்தி கேட்டு பதறி அடித்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தாள்.
அவளை தலை மேல தூக்கி வைச்சு ஆடின… இப்ப பாரு பிள்ளைகளையும் உன்னையும் அம்போயென விட்டு விட்டு ஓடுகாலி ஓடிபோய்டா…என்ற அம்மாவை
“அம்மா கத்தாதே… நான் பார்த்துக் கொள்கிறேன் ” என்றான்.
“நீ பார்த்துக் கொண்ட லட்சணத்தை நான் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன். “
அந்த மனுஷன் இருந்து இருந்தா இந்த நிலைமை வந்து இருக்குமா…. என்ற அப்மாவை…. பேசாம இருந்தா இரு. இல்லையெனில் நீ தங்கச்சி வீட்டுக்கே போ. நான் பசங்களை பார்த்துக் கொள்கிறேன் என்றவுடன் அமைதியாகி போனாள்.
உன் பொண்ணு உன்ன மாதிரி இருக்கும் நினைச்சு ஏமாந்துட்டேனே. என் புள்ளை வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே…. என இராமின் அம்மாவின் பேச்சுக்கு என்ன பதில் சொல்வது தெரியாமல் பேசாமல் அங்கேயே ஜடமாக கிடந்தாள் குமுதா.
******
இரண்டு நாள் இரண்டு யுகமாக போனது.
இராம் பிள்ளைகள் இருவரையும் பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருந்தான்.
திங்கட்கிழமை காலை எழுந்தவுடன் “அத்தை அம்மா குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள் நான் கொஞ்சம் வெளியே போய் விட்டு வருகிறேன்”, என சென்றான்..
இராமின் அம்மா பிள்ளைகளோடு ரூமில் இதுக தலையெழுத்து எப்படி ஆகபோகிறதோ என அழுதபடி படுத்து இருந்தாள்.
குமுதா குழந்தைகளுக்கு இட்லி செய்துக் கொண்டு இருந்தாள்…
மெதுவாக கதவு திறக்கும் சத்தம் கேட்டது…
சீதா தயங்கிய படி உள்ளே வருவதை பார்த்தாள் குமுதா. கையில் இருந்த கரண்டியை சீதாவின் மேல் வீசி அடி பாவி மகளே… எங்கடி வந்தே! மானங்கெட்டவளே… என் மாப்பிள்ளையை தலை குனிய வைத்து விட்டயே என கூப்பாடு போட.. இராமின் அம்மா குழந்தைகள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தார்கள்…
குழந்தைகள் ஓடி வந்து அம்மாவை கட்டி பிடித்துக் கொண்டது….
சீதா கண்களில் கண்ணீரோடு நின்று கொண்டு இருந்தாள்..
மாமியாரின் வசை சொல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது.
வீதி ஜனம் வீட்டில் கூடியது.
*****
வீட்டின் முன்னிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் இராம். தெருக்கூடி மொத்த பெண்கள் கூட்டமும் சீதாவை வசைபாடிக் கொண்டு இருந்தனர்.
சீதாவின் மடியில் சூர்யாவும் தோளில் கார்த்திக்கும் கட்டி பிடித்துக் கொண்டு கலக்கத்தில் இருந்தார்கள். ராம் எதும் பேசாமல் சீதாவை பார்த்தான். ஒர் ஆயிரம் உரையாடல்கள் அந்த ஒரு பார்வையில் அரங்கேறியது.
கணவனை நிமிர்ந்து பார்த்த சீதாவின் கண்களில் கண்ணீர் புரண்டு ஒட தலையில் அடித்துக் கொண்டு “நான் தப்பு செஞ்சிட்டேங்க… தப்பு செஞ்சிட்டங்க… என்னை மன்னிச்சுடுங்க…” . என கணவனின் காலில் விழுந்து கதற, மனைவியை மெதுவாக தோள் பிடித்து தூக்கினான் ராம்
வீடே நிசப்தமாக இருந்தது
மனைவியின் கண்களை துடைத்தான். “என்னை மன்னிச்சுடுங்க…… என்னை மன்னிச்சுடுங்க” என்று கதறும் மனைவியிடம் “ஒன்னுமிலை மா… உள்ளே போ … போய் தலைக் குளித்து விட்டு விளக்கு ஏற்று…. பசங்களை ரெடி செய்… எல்லோரும் வெளியே போகலாம்” என்றான்
கூடி இருந்தவர்கள் வாய் பிளந்தார்கள்…..
“அட மானம் கெட்டவனே “ அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமா உள்ளே போன்னு சொல்லறியா….. என கத்திய படி ராமின் அம்மா கமலா ஒடி வர…..”
“அம்மா பேசமா இருங்க..”.
“இது என் குடும்ப விஷயம். நான் பார்த்துக் கொள்கிறேன். நான் இந்த மாதிரி ஒரு தப்பு பண்ணியிருந்தால் அவ என்னை விட்டு போய் இருக்கமாட்டா…..”
ஏதோ அன்று அவளின் மனநிலை அன்று தவறு செய்ய தூண்டிவிட்டது…… தப்பு செய்துவிட்டாள். அவளும் மனுஷி தானே.
காலில் சேற்றை மிதித்து விட்டால் காலை கழுவ தான் செய்வோம். காலை வெட்டி விட மாட்டோம். என் பெண்டாட்டியை பற்றி எனக்குத் தெரியும். என் குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். எல்லாம் கிளம்புங்க என்ற ராமை வந்த வீதி அக்கம் பக்கத்து ஜனங்கள் காதுகளை கடிக்க ஆரம்பித்தார்கள்.
இராம், “சொல்லுறேன் இல்லை எல்லோரும் கிளம்புங்க, உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணாடியை முதல் போய் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே மனைவி மகன்களை அணைத்துக் கொண்டு உள்ளே சென்றான்”.
வந்த வீதி அக்கம் பக்கத்து ஜனங்கள் வாய் பிளந்து வெளியேறினார்கள்
மாமா என ஏதோ சொல்ல வந்த மனைவியை நேற்று நடந்ததை மறந்து விடு….. என சொல்லி கொண்டு செல்லும் மருமகனை பிரமித்து பார்த்த வண்ணம் இருந்தாள் மாமியார் குமுதா.
ஊர் வசைக்கும், வண்ணான் ஒருவன் வசைக்கும் அஞ்சி எந்த தவறும் செய்யாத சீதையை தீயில் இறக்கி, நிறைமாத கர்பினியை கானகத்திற்கு அனுப்பினான் இதிகாச இராமன். ஆனால் தவறு செய்த என் மகளை இன்று மன்னித்த எனது மருமகன் இராம் எங்கே? அந்த இராமன் எங்கே?
அவளை அறியாமல் அவள் வாய் சில சொற்களை சிதறிக் கொண்டே இருந்தது “நீ என் குலச்சாமி மாப்பிள்ளை” என்று……கண்களை துடைத்துக் கொண்டு வெளியேறினாள் குமுதா.
சுபம்.