இந்த கதையோடு ஹீரோ ஒரு இருட்டான ரோட்டில் சைக்கிள் ஓட்டிட்டி போயிட்டு இருக்கான். அந்த ரோட்டுல இரண்டு பக்கமும் வீடுகள் உள்ளன, ஆனால் எந்த வீட்டுலையும் எந்த ஒரு மின் விளக்குகளும், வெளிச்சமும் இல்லாத வீதியாகத்தான் இருக்கு, நிலாவின் வெளிச்சம் அவனுக்கு வழிகாட்ட சைக்கிளில் தொடந்து போயிட்டுயிருக்கான். சைக்கிள் தள்ளாடி தள்ளாடி போகுது, காரணம் ஹீரோ குடிச்சிட்டு இருக்கிறதாலயும் தன்னுடைய கண்களைய் இரண்டையும் முழுச்சி முழுச்சி பாத்துட்டு தன்னுடைய கால்களால் பெடல மிதிக்க சைக்கிள் கொஞ்சம் வேகம் பறக்க தொடங்கிச்சி.அவனுக்கு பயம் வந்துடுச்சு அதனாலதான் என்ன ஆனாலும் ஆகட்டுனு சொல்லி வேகத்த கட்டுப்படுத்தாம போயிட்டு இருக்கான். கொஞ்சம் நேரம் தூரம் போனதும் சைக்கிள் ஒரு இடத்தில் நின்னுச்சி. சுத்தி முத்தி பாத்தா ஒருசில வீடுகள் தான் ஹீரோ கண்ணுக்கு தெரியுது. அவன் நிறுத்தின வலப்பக்கத்தில ஒரு வீட்டை பார்த்தான் ஹீரோ, அதுதான் அவன் வீடு போல அவனும் அந்த வீட்ட நோக்கி போறப்போ பின்புறம் யாரோ பின்தொடர்ந்து வற்றமாதிரியாக தோனியதால மெதுவாக திரும்பி பார்த்தான், யாரும் இல்லன்னு புரிஞ்சிக்கிட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடிவந்து கதவு தாழ்ப்பாள் போட்டுக்கிட்டான். கதவுபக்கமா ஒருசில விநாடிகள் நின்ற ஹீரோ கதவைத் திறக்கும் வழியாக உற்றுப் பார்த்தான், அவன் சைக்கிளை நிறுத்தி சுற்றி முற்றும் பார்த்த இடம் மக்களாக தெரிந்தது, டப்புனு…..ஒரு கருப்பு உருவம் தெரியவே தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டேன். ஹீரோ கண்விழித்து பார்த்த இடம் படுக்கையறையாக இருப்பதால் தனது முகத்திலே இருக்கையையும் வைத்து முகத்தைய் துடைத்துக்கொண்டான். ச்ச்சே……. கனவா….. என்று உச்சரித்து விட்டு தொண்டைய்காய்ந்ததை உணர்ந்த அவன் தனது அருகிலே படுத்து உறங்கிய தனது தம்பிக்கு இடையூறு இல்லாமல் மெதுவாக நடந்து வீட்டின் முன் அறைக்கு வந்தான். அங்கு மூலையில் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன கதவைத் திறந்து தண்ணீர் பாட்டிலைய் எடுத்துக்கொண்டு குளிர்சாதன கதவை மூடிவிட்டு, வீட்டின் முன் கதவின் அருகே வந்த ஹீரோ கதவைய்திறக்கும் வழியாக பார்த்தான். ரண்டு, மூனுதடவைய் பார்த்தான் அந்த கருப்பு நிற உருவம் கண்களுக்கு தெரியல. மீண்டும் ஹீரோ தனது படுக்கையறைக்கு வந்து தனது போர்வையைப் போர்த்திக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தான். மறுநாள் விடியற்காலை வேளையில்……அம்மா……. எனக்கு ஸ்கூல் லேட்டாச்சி சீக்கிரம் எனக்கு சாப்பாடு ரெடிபன்னிக்குடுங்கன்னு ஹீரோவின் தங்கச்சி சொல்லிக்கொண்டே கண்ணாடி முன் நின்று சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். அம்மா… ஸ்கூல் பஸ் வந்துடும் அப்புறம் என்னைய் யார் ஸ்கூல்ல வந்துவிடுவான்னு கேட்டால் ஹீரோவின் தங்கச்சி…..அனஸ்திகா.அதே நேரத்தில் ஸ்கூல் பஸ் வந்து ஹீரோவின் வாசலில் வந்து நின்று கொண்டு ஆரன் செய்துவிட்டு விரைந்தது. அம்மா… அம்மா… பஸ் போயிடுச்சு……….போயிடுச்சுன்னு அனஸ்திகா கத்த… சமையல் அறையிலிருந்து உன்னை உன் அண்ணன் வந்து ஸ்கூல்ல விடுவான்னு அனஸ்திகாவின் அம்மா ஏஞ்சலினா குரல் கொடுத்தாள்.என்ன வாண்டு பஸ் போயிடுச்சான்னு அவளுடைய ரெண்டாவது அண்ணனான டேனியல் கோபமாக்க தொடங்கினான். டக்குனு நீ இன்னும் ரெடியாகலியான்னு டேனியலின் அண்ணன் நம்ம கதையோடு ஹீரோ வால்டன் கேக்க ம்ம்ம்….. நான் ரெடின்னு தாழ்ந்த குரலில் கூறினான். என்னடா டேனியல் உடம்புக்கு குரல் ஒரு மாதிரியாக இருக்குன்னு வால்டன் கேட்டான், அதற்கு ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டு நைட்டு எனக்கு உடம்பெல்லாம் ஒருமாதியாய் இருந்துச்சின்னு சொல்லிட்டு தன்னுடைய ஸ்கூல் பையை எடுத்து மாட்டிக் கொண்டான், தனக்கான மதியவேளை உணவு பையையும் கையில் எடுத்துக் கொண்டான். அனஸ்திகா…….. ரெடியாகிட்டியான்னு கேட்க நான் ரெடியாகிட்டேன்னு அனஸ்திகா குரல் கொடுத்தாள். இருவரையும் வால்டன் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போகும் பாதையில் சிறிது தூரத்தில் அவன் நைட்டு கனவில் கண்ட காட்சிகள் நினைவுக்கு வந்தது. சற்று இருபுறமும் பார்த்துக் கொண்டான் வால்டன். பகல் நேரம் தானே என்று நினைத்து தன்னைத் திடப்படுத்திக்கொண்டு சைக்கிள் பாடலைப் வேகமாக மிதிபோட ஆரம்பித்தான். சற்று தொலைவில் ஸ்க்கூலின் பெயர் பலகை வால்டன் கண்ணுக்கு தெரிந்தது. ஸ்கூல் அருகே வந்தவுடன் இருவரையும் இறக்கி விட்டு விட்டு போகும் நேரத்தில் இருவரின் பின்புறம் பார்த்தான் நைட்டு கனவில் பார்த்த கருநிற உருவம் சிரித்துக் கொண்டிருந்தது கண்ணுக்கு தெரிந்தது சட்டென்று….. தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டான் ஹீரோ வால்டன்…………
தொடரும்….. மர்மம்……
நன்றி……