– P. சேது மாதவன்

சில்பா (chilpha)… இவள் ஒரு நடுத்தரவாழ் குடும்பத்தைச் சேர்ந்த பெண். இவள் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை பெற்று, தற்போது கல்லூரியில் சமூகம் பற்றிய படிப்பை பயின்று வருகிறாள். சில்பாவிற்கு அண்ணன் ஒருவன் உள்ளான். அண்ணன் மற்றும் அப்பாவின் உழைப்பின் மூலம் சில்பாவின் குடும்பம் இயங்குகிறது.
தாரா (Thara)… இவளும் சில்பாவை போல நடுத்தரவாழ் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனால் தொலைபேசியை நோன்டுவதில் பெருமிதம், ஆர்வம் உள்ளவள். அவளது பெரும்பாலும் நேரத்தை தொலைபேசியிலே கழித்துவிடுவாள். இவளும், சில்பாவும் நெருங்கிய தோழிகள். இருவரும் ஒன்றாக ஒரே கல்லூரியில் தான் பயின்று வருகின்றனர். தாராவின் தந்தையின் வருமானத்தில் மட்டுமே அவளது குடும்பம் இயங்குகிறது.
ராதிகா (Rathika)… இவள் பணம் அதிகமுள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண். ராதிகா வீட்டிற்கு ஒரே பெண். அவளுடைய அப்பாவிற்கு நான்கு கல்லூரிகள், பத்து பேருந்துகள் மற்றும் ஐந்து வீடுகள் உள்ளது. ராதிகாவும், சில்பா மற்றும் தாராவின் தோழி தான். மூவரும் நல்ல நண்பர்களாக ஒரே கல்லூரியில் தனது படிப்பை மேற்கொண்டு வருகின்றனர். படிக்கும் நேரத்தில் படித்துவிட்டு, மீதமுள்ள நேரங்களில் ஊர் சுற்றுவது என மகிழ்ச்சியாக இருந்தனர்.
அவ்வாறே சில நாட்கள் கழிந்த நிலையில், மூவரும் ஒரு திட்டம் தீட்டினர். மூவரும் சேர்ந்து குரூப் தேர்வுகள் எழுதலாம் என்று முடிவு செய்து, அதற்கான கையேடுகளை இணையம் மூலம் சேகரித்தனர்.
இந்த வேலை முடிந்ததும் மூவரது கையிலும் தனித்தனியாக நிறைய கையேடுகள் இருந்தன. அதனையெல்லாம் ஒன்றிணைப்பதற்காக சில்பா தனது தோழிகளிடம் கலந்துரையாடி, ஒரு யோசனையை கூறினாள். என்னவென்றால் மெயில் ஐடி (Mail id) ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் Google Drive Open செய்து அதனுள் அனைத்தையும் புகுத்தி விடலாம் என்று. தேவைப்படும் போதெல்லாம் மெயில் ஐடியும், பாஸ்வேர்டும் போட்டு படித்துக்கொள்ளலாம் என்று திட்டம் தீட்டினாள். அதற்காக சில்பா தனது பெயரில் முதல் எழுத்தையும், தனது தோழிகளின் பெயரின் முதல் எழுத்துக்களையும் சேகரித்து “chithra@gmail.com” என்ற மெயில் ஐடியை உருவாக்கினாள். தனது தோழிகளிடம் கலந்துரையாடிய பின் மூவரும் அந்த மெயில் ஐடியை பயன்படுத்த ஒப்புக்கொண்டனர்.
பின்னர் சில்பா தனது அண்ணனிடம் கூறி அந்த மெயில் ஐடியையும், அதற்கான பாஸ்வேர்டையும் உருவாக்கி அண்ணனிடம் இருந்து வாங்கிக்கொண்டாள். அதன்பின் மூவரும் அந்த மெயில் ஐடியையும், அதற்கான பாஸ்வேர்டையும் பதிவு செய்துப் பார்க்கையில், அந்த ஐடியினுள் சேமிப்பு கணக்கினுள் (Draft (1)), ஓர் செய்தி சேமிக்கப்பட்டிருப்பதை காண்கின்றனர். மூவரும் அதைத் திறந்து அது என்னவென்று பார்த்தனர். அதில் ஓர் கதை எழுதப்பட்டிருந்தது. பின்னர் அக்கதையை படிக்க ஆரம்பிக்கின்றனர்…
அதில்….
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு…
ஓர் அழகிய நகரத்தில் ராம், சீதா என்ற ஓர் அழகிய தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஓர் பெண் குழந்தை மற்றும் ஓர் ஆண் குழந்தை உள்ளனர். தந்தை ராமின் உழைப்பால் மட்டுமே, அந்த குடும்பம் இயங்கி கொண்டுள்ளது. தாய் சீதா வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு, வீட்டிலே உள்ளார். மகள் பெயர் சித்ரா. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, கல்லூரி பயில காத்துக் கொண்டிருக்கிறாள். தம்பி ராஜா எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு, ஒன்பதாம் வகுப்பிற்கு செல்கிறான். அந்த அழகிய குடும்பம் மகிழ்ச்சியுடனும், பேரானந்தத்துடனும் வாழ்ந்து வந்தது.
அதன்பின் சித்ராவிற்கு கல்லூரியில் சேர்வதற்கு படிவம் விண்ணப்பிக்கும் தேதி ஆரம்பித்துவிட்டது. சித்ராவோ தந்தையிடம் கலந்துரையாடிவிட்டு கல்லூரியில் சேர்வதற்கான முடிவை எடுத்துள்ளாள். மறுநாள் தந்தை வேலைக்கு சென்றுவிட்டார். அம்மாவும், தம்பியும் வீட்டில் உள்ளனர். சித்ரா தனது மதிப்பெண் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு, இணைய சேவை மையத்துக்கு (Browsing center) செல்கிறாள். அங்கு கடைக்காரரிடம் தான் வந்த காரணத்தைக் கூறி விண்ணப்பிக்க ஆரம்பிக்கின்றாள். அவ்வாறு செய்து கொண்டு இருக்கையில், கடைக்காரர் சித்ராவிடம் மெயில் ஐடி உள்ளாத என்று கேட்க, சித்ரா என்னிடம் இல்லை என்று கூறிவிட்டாள். பின்னர் கடைக்காரரே ஒரு மெயில் ஐடியை உருவாக்கினார். அது chithra@gmail.com.
பின்னர் அதனுடன் தொலைபேசி எண்ணை இணைப்பதற்காக சித்ராவிடம் தொலைபேசி எண் உள்ளதா? என்று கேட்க, அவளோ தனது தந்தையின் தொலைபேசி எண்ணை குடுத்துவிட்டாள். பின்னர் கடைக்காரர் உனது தந்தையின் தொலைபேசிக்கு OTP ஒன்று வந்திருக்கும், அதனைக் கேட்டு என்னிடம் சொல் என்றார். அதன்பின் சித்ரா கடைக்காரரின் தொலைபேசியை பெற்று தந்தையை அழைத்தாள்.
ஆனால் அப்போது தந்தை வாகனம் ஓட்டிக்கொண்டே தொலைபேசியில் சித்ராவிடம் பேசிக்கொண்டே சென்றார். இதனை அறிந்த சித்ரா தந்தையிடம் “அப்பா நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுவிட்டு, அதன்பின் OTP யை பார்த்து சொல்லுங்கள் என்று தொலைபேசியை துண்டித்துவிட்டாள்”. பின்னர் தந்தை மகள் ஏதோ கேட்கிறாள் என்று, ஒரு கையால் வாகனத்தை ஓட்டிக்கொண்டு மறுகையில் தொலைபேசியை பார்த்துக்கொண்டு போகிறார். அவ்வாறு போய்கொண்டு இருக்கையில், அவரின் எதிரே வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது. பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு மகள் தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள Not Reachable என்று கூறிக்கொண்டு இருந்தது. நெடுநேரம் தொடர்புக் கொண்டும் தொடர்பு கிடைக்கவில்லை.
லாரி மோதியதில் மோதிய இடத்திலே தந்தையின் உயிர் போய்விட்டது. OTP வராத நிலையில், சித்ரா தனது அம்மாவின் தொலைபேசி எண்ணைப் பதிவு செய்து, அதன்பின் தொலைபேசியில் அம்மா சீதாவை தொடர்புக் கொண்டாள். ஆனால் அம்மா தொலைபேசியை எடுக்கவில்லை. வீட்டிலோ அம்மா சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைக்கிறாள். அதுவோ சரியாக வேலை செய்யவில்லை. பின்னர் அதனை சரிசெய்ய ஒருவரையும் வரச்சொல்லி விட்டாள். அப்போது தம்பியோ வீட்டில் அவனது அறையில் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தான். சிலிண்டர் சரிசெய்ய வந்த நபர், சிலிண்டரை பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது அம்மாவின் தொலைபேசியும் சமையல் அறையில் தான் இருந்தது. சிலிண்டரை சரி செய்துக் கொண்டிருக்கையில் அவருக்கும் தொலைபேசியில் அழைப்பு வர, அவர் தனது தொலைபேசியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர் வேலை செய்துக் கொண்டிருந்த நிலையிலே சிலிண்டரை விட்டு விட்டு வந்தார். சித்ராவோ OTP யை கேட்க தொலைபேசியில் தொடர்புக் கொண்டாள்.
முதல் முறை எடுக்கவில்லை, இரண்டாவது முறையும் எடுக்கவில்லை, மூன்றாவது முறை எடுக்க தாமதம் ஆனதால், தொலைபேசியை துண்டிக்காமல் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டாள். அந்த நேரம் அம்மா சீதா சமையல் அறைக்குள் நுழைந்து தொலைபேசியில் வந்த அழைப்பை ஏற்க….. உடனே வீடே வெடித்து சிதறியது. வீட்டினுள் இருந்த அம்மா மற்றும் தம்பி நெருப்பிலே கருகி உயிரை இழந்துவிட்டனர்.
பின்னர் OTP கிடைக்கா நிலையில் கடைக்காரரே அவருடைய தொலைபேசி எண்ணை பதிவு செய்து அதன்மூலம் OTP-யை பெற்று விண்ணப்பம் முழுவதையும் பூர்த்திச் செய்தார். அதன்பின் கடைக்காரர் சித்ராவிடம் இப்போது மட்டும் எனது தொலைபேசி மூலம் OTP-யை பெற்று பதிவு செய்துள்ளேன். பின்னர் தொலைபேசி எண்ணை மாற்றிக்கொள்ளலாம் எனக் கூறி, சித்ராவை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
விண்ணப்பித்த மகிழ்ச்சியில் அவள் வீட்டிற்கு செல்கிறாள். ஆனால் அங்கு வீடும் இல்லை. வீட்டிலிருந்த அம்மா மற்றும் தம்பியும் இல்லை. சித்ராவோ வீட்டின் முன் நின்று வீட்டை பார்த்துக் கதறி அழுதுக் கொண்டிருக்கிறாள். அவ்வாறு அழுதுக் கொண்டிருக்கையில், அவளது தந்தையின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தது. துயரத்தின் மேல் துயரங்களை கண்ட சித்ரா தனது பெற்றோர்களையும், தம்பியையும் இழந்த வருத்தத்தில் கதறி அழுகின்றாள். பின்னர் உறவினர்களின் உதவியோடு தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஆனால் சித்ராவோ சில நாட்கள் அந்தத் துயரத்தில் இருந்து மீண்டு வரவில்லை. துயரத்தில் இருக்கையில், அவள் விண்ணப்பித்த கல்லூரியில் பயில அவளுக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை. அவளுக்குக் கிடைத்த இடத்தை, வேறு ஒருவர் பணம் செலுத்தி பெற்றுவிட்டார். பின்னர் மனஉளைச்சல் தாங்காமல், சித்ராவும் தற்கொலை செய்து கொண்டாள்.
அவளது பெயரில் இவ்வுலகில் அந்த மெயில் ஐடி மட்டுமே உள்ளது. அவளும் இல்லை… அவள் பெற்றோர்களும் இல்லை…
மூன்று ஆண்டுகளுக்கு பின்பு…
சித்ராவின் மெயில் ஐடியை போலவே சில்பா, தாரா மற்றும் ராதிகா ஒரு மெயில் ஐடியை உருவாக்கியுள்ளனர். இந்தக் கதைல திருப்பம் என்னவென்றால், சில்பாவின் அண்ணன் தான், சித்ராவின் வாழ்வில் வந்த “அந்தக் கடைக்காரர்”. அவர் சித்ராவிற்கு நடந்த நிகழ்வுகளை அறிந்து, அவளுடைய சிறிய வாழ்க்கைப்பற்றிய குறிப்பை அவரே Type செய்து, சித்ராவின் மெயிலில் சேமித்து வைத்துள்ளார்.
பின்னர் சில்பா அவளுடைய அண்ணனிடம் சென்றுக் கேட்கையில். அவர் அதே மெயில் ஐடியில் தொலைபேசி எண்ணை மற்றும் மாற்றம் செய்து கொடுத்துவிட்டார். பின்னர் சில்பா மற்றும் தோழிகள் சித்ராவின் சின்ன வாழ்க்கைப் பற்றிய குறிப்பை படித்துவிட்டு, தங்களை தாங்களே மாற்றிக்கொண்டனர்.
சில்பா, இந்த சமூகம் போடும் விதிமுறைகளையும் மற்றும் சாலை விதிகளையும் பெரிதும் மதித்து அவற்றை பின்பற்ற ஆரம்பித்தாள். அவள் மட்டும் பின்பற்றுவது மட்டுமல்லாமல், அதற்கான விழிப்புணர்வுகளையும் அவளை சுற்றி உள்ளவர்களுக்கு முடிந்த அளவு ஏற்படுத்தினாள்.
தாராவும் அதன் பின் தொலைபேசியில் நேரம் செலவிடுவதை குறைத்துவிட்டாள். அவளால் முடிந்தவரை தொலைபேசியை எங்கு எங்கு பயன்படுத்த வேண்டும், எங்கு எங்கு பயன்படுத்தக் கூடாது என்று தன்னை சுற்றி உள்ளவர்களிடம் கூறி, அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினாள்.
அதன்பின் ராதிகாவும் தன்னுடைய தந்தையிடம் பேசி, வருடம் ஒருமுறை தங்களுடைய கல்லூரிகளில் கல்வி பயில, சித்ராவைப் போல திறமையான மாணவி மற்றும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்க வேண்டும் என்று கூறினாள்.
தனது மகளின் வேண்டுதலை ஏற்று, ராதிகாவின் தந்தையும் அதற்கு ஒப்புக்கொண்டார். சித்ராவின் வாழ்க்கையை பற்றி அறிந்த தோழிகள்… அவளின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் இனி எவருக்கும் நடக்க கூடாதென்று முயன்ற வரை விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
இதேபோல் நாமும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு சில நல்ல பாடங்களை கற்றிருப்போம்… அல்லது பார்த்திருப்போம்… அதனையெல்லாம் முடிந்தவரைப் பிறருக்குக் கொண்டு சேர்த்தால்… நூற்றில் ஒருவராது பயன் பெறுவார்…
(இங்கு OTP என்பது one time password அல்ல)…
Observe the Traffic Rules.
Turn off your mobile in Dangerous places.
Poverty is a deadly disease. Let’s save a few people from it.
சமுகத்தின்… ஓரத்தில் ஒருவன்.
– கதைப் படிக்கலாம் – 66
இதையும் படியுங்கள் : ஆண் தேவதை




