Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home படைப்புகள்

தர்மம் வெல்லும்!

September 8, 2020
– பெண்ணாகடம் பா. பிரதாப்

அது ஒரு கொடுமையான தருணம்! சுதந்திர போராட்ட வீரர்! தியாகி ராஜலிங்கத்திற்கும் அப்படித்தான் இருந்தது. முற்றிலுமாக உலகம் ஒதுக்கி விட்டதுப் போல் உணர்ந்தார்.

தனக்கு, தன் உடன் பிறந்த சகோதரியே செய்த துரோகத்தை!, மனதில் அசைப் போட்டவாறே தன் வீட்டை அடைந்தார்.

செய்தி அலை சிறுகதை போட்டி முடிவுகள்…

மனப் ‘பாங்கு’

வணக்கம் வாசக எழுத்தாளர்களே….

வீட்டின் நடுவில், தியாகி ராஜலிங்கத்தின் அப்பா ராமசாமி முதலியாரின் படம். நெல்மண்டி ராமசாமி என்றால் தெரியாதவர்களே கிடையாது. புசிக்க உணவில்லை என்று யாரும் அவரிடம் வந்து கூறிவிடக்கூடாது. உடனே அள்ளிக் கொடுத்து விடுவார். அப்படி ஒரு வள்ளல்.

ராமசாமி முதலியாருக்கு மூன்று பிள்ளைகள். முதலாவது சுந்தராம்பாள். இரண்டாவது ராஜலிங்கம் மற்றும் கடைக்குட்டி வடமலை ஆவார்.

ராமசாமி தன் மகள் சுந்தராம்பாளை வதிட்டக்குடியிலுள்ள, மிராசுதார் சோமசுந்தரத்தின் மகன் வடமலைக்கு திருமணம் செய்து வைத்தார்.

ராஜலிங்கமோ! அண்ணல் காந்தி அவர்களின் கொள்கைகளில் ஈடுபாடுக் கொண்டு, இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, ஐந்து வருடம் பீகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின் இந்தியா சுதந்திரம் அடைந்தப் போது விடுவிக்கப்பட்டார்.

ராமசாமியின் இளைய மகனாகிய வடமலையோ, தன் தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ராஜலிங்கம், தன் அக்காவே தன்னை ஏமாற்றுவார் என்றுக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இப்படியாக பல எண்ணங்கள் உருண்டோடிக் கொண்டிருக்கும் போது, கோயிலுக்கு சென்று வந்த அவரது மனைவி அசலாம்பாளும், அவரது ஒரே மகன் பாண்டியனும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

என்னங்க எப்போ வந்தீங்க.! கை கழுவிட்டு வாங்க… சாப்பிடலாம்…

எனக்கு பசிக்கல சின்னப்புள்ள. நீயும், பாண்டியனும் சாப்பிடுங்க… என்று மெல்லியக் குரலில் கூறினார் ராஜலிங்கம். தன் மனைவியை ‘சின்னபுள்ள’ என்று அழைப்பதே ராஜலிங்கத்தின் வழக்கம்.

அப்பா, ஏன் ஓரு மாதிரி இருக்கீங்க? உடம்பு கிடம்பு சரியில்லையா என, தன் பங்கிற்குப் பேச தொடங்கினான் பாண்டியன்.

பாண்டியா, நானும் உன் சித்தப்பன் வடமலையும், வெயில் மழையினு கூட பாக்காம… நெல்லு, கரும்பு, வாழைன்னு பயிர் செஞ்சோம்.

அப்படி கொஞ்ச கொஞ்சமா சேத்த காசுல, நம்ம ஊர் பெரிய கோவிலுக்கு சொந்தமான, ரெண்டரை சென்ட் மெயின் ரோட்ல இருக்கிற இடத்தை, உங்க அத்தை சுந்தராம்பாள் மூலமாக, அஞ்சு லட்சம் ரொக்கமா கொடுத்து முடிக்க சொன்னோம்.

உங்க அத்தையும், வடமலை பேர்ல வாங்கிட்டன்னு ரசீதை காமிச்சது. நானும் ரொம்ப சந்தோஷம்னு சொல்லிபுட்டு, நீர் பாய்ச்சரத்துக்கு வயலுக்கு போயிட்டேன்.

சரிப்பா எல்லாம் நல்லா தானே நடந்திருக்கு… இப்போ என்ன பிரச்சனை?

சரியா நடக்கல… எல்லாமே தப்பா போயிடிச்சு பாண்டியா! தப்பா போயிடிச்சு!… உன் அத்தை மேல வச்சக் கணக்கு தப்புக்கணக்கா போயிடிச்சு.

உன் அத்தை நமக்கு துரோகம் பண்ணிட்டா. உன் சித்தப்பன் ரா.வடமலை பேர்ல ரசீது வாங்குறதுக்குப் பதிலா, தன் புருஷன் சோ.வடமலை பேர்ல கோயில்ல ரசீது வாங்கிட்டா.

ராஜலிங்கம் பேச்சைக்கேட்ட அசலாம்பாளும், பாண்டியனும் ஆடிப் போய்விட்டனர்.!

அப்பா நீங்க பணம் கொடுக்கும் போது கூட யாராவது இருந்தாங்களா?……. வக்கீல் கணக்காக பாண்டியன் கேள்வி கேட்டான்.

உண்மையில் பாண்டியன் ‘சென்னை லயோலா கல்லூரியில்’ சட்டம் பயின்றான். அதனாலே, தன் அப்பா பணம் கொடுத்ததற்கு ஏதாவது சாட்சி இருக்குமா என்பதனை கேட்டுவிட்டான்.

ராஜலிங்கம், இல்லை என்பது போல தலையசைத்தார். விதி இப்படித்தான் சிலர் வரையில் விளையாட தொடங்கி விடும்.

மூவரையும் கவலை கவ்விக் கொண்டிருக்கையில், வெளியூர் சென்றிருந்த தம்பி வடமலையும் வீட்டிற்குள் நுழைந்தார்.

அண்ணன் ராஜலிங்கம் விஷயத்தை சொல்லப் போகவே, வடமலை மௌனத்தில் ஆழ்ந்து… வீட்டின் ஒரு மூலையில் படுத்து உறங்கிவிட்டார். வீட்டில் மௌனம் மட்டுமே பேசியது! இரவு மெல்ல மெல்ல இருட்டை விழுங்கிக் கொண்டிருந்தது.

பொழுது புலர்ந்தது! ஆனால் ராஜலிங்கததின் வீடு மட்டும் இருண்டே இருந்தது. இரவு படுக்கையில் படுத்த வடமலை, காலை எழுந்திருக்கவில்லை! வடமலை திருமணம் செய்து கொள்ளாமலேயே, அண்ணன் குடும்பத்திற்காகவே மாடாக உழைத்த,  மா மனிதன்.

வற்றாத அருவிப் போல, ராஜலிங்கத்தின் கண்களில் கண்ணீர். அவரைச் சுற்றி அக்கம் பக்கத்தில் உள்ள அத்தனை பேருமே அமர்ந்து கொண்டிருந்தனர். அசலாம்பாள் ஒரு மூலையில், பெண்களோடு பெண்களாக மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தாள்.

பாண்டியன் மட்டுமே, ஒரு தீர்க்கமான முடிவோடு நடக்க வேண்டியவைகளை கவனித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் சுந்தராம்பாள், தன் கணவன் வடமலை மற்றும் இரண்டு மகன்கள் சுப்ரமணியம் மற்றும் ராஜேந்திரனுடனும், ராஜலிங்கம் வீட்டிற்குள்  நுழைந்தனர்.

வீட்டிற்குள் நுழைந்த சுந்தராம்பாளை, ராஜலிங்கம் எங்க வந்த வெளிய போ! என்று கடும் கோபத்துடன் கூறினார்.

சுந்தராம்பாள் ஏதும் அறியாதவளைப் போல, நீலிக் கண்ணீர் வடித்தாள்.

பணத்திற்கு பணமும் போச்சு. இப்போது தம்பியும் போய்விட்டானே.! இந்தக் கொடுமையை யாரிடம் போய் சொல்லி அழுவது.? ஐயோ…. எல்லோரும் பணம் கொடுத்ததற்கு என்ன அத்தாட்சி என்று கேட்பார்களே…. பணம் கொடுக்கும் போது, தானும் தன் தம்பி வடமலையும் அஞ்சு லட்சம் ரூபாயை தன் அக்காவிடம் கொடுத்தோம் என்று பதில் சொன்னால், அஞ்சு லட்சத்துக்கு ஒரு துண்டு சீட்டுக்கூடவா எழுதி வாங்கவில்லை என்பார்கள்…. பணம் கொடுத்ததற்கு சாட்சியாக இருந்த தன் தம்பி வடமலையும், இப்போது இறந்து விட்டான்.

ஒரு வழியாக ஊர்மக்கள் ஒன்று கூடி ‘உங்க குடும்ப விஷயத்தை அப்புறம் பேசி முடிச்சுக்கோங்க’ இப்போது நடக்க வேண்டியதை பாருங்க என்றனர். இறுதியாக இறுதி சடங்கும் நடந்து முடிந்தது… நாட்கள் கடந்தன…

சுந்தராம்பாள் வீடு!…

வீட்ல யாருங்க? போஸ்ட்மேன் குரல் ஒலித்தது. சுந்தராம்பாள் வீட்டிற்கு வெளியே சென்று, போஸ்ட்மேன் கொடுத்தக் கவரை வாங்கி விட்டு, வீட்டிற்கு சென்றாள்.

என்னம்மா! கவர் என்று சுப்ரமணியன் கேட்டான். சுந்தராம்பாள், சுப்ரமணியத்திடம் கொடுத்து படிக்கச் சொன்னாள். பின்னர் சுந்தராம்பாள் கணவர் வடமலையும், மகன் ராஜேந்திரனும், படித்து முடித்தனர்.

யாவரும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்….!

ஏனெனில் பாண்டியன், சுந்தராம்பாள் மீது வழக்கு தொடுத்திருந்தான். அதன் நிமித்தமாக, கோர்ட்டிற்கு வருகின்ற திங்களன்று ஆஜராக சொல்லி, வக்கீல் நோட்டீசும் நீதிமன்ற உத்தரவும் இருந்தது.

திங்கட்கிழமை!…

கடலூர் கோர்ட்டில், ராஜலிங்கத்தின் குடும்பத்தினரும் சுந்தராம்பாள் குடும்பத்தினரும் ‘கீரியும் பாம்பும்’ போல காட்சியளித்தனர்.

ராஜலிங்கத்தின் சார்பாக, அவரது மகன் பாண்டியன் வக்கீலாகி ஆஜராகி இருந்தான். சுந்தராம்பாள், சென்னையிலுள்ள பிரபலமான வக்கீல் வெற்றி மாறனை, தனக்காக வாதாட ஏற்பாடு செய்திருந்தாள்.

வழக்கு தொடங்கியது.!

விசாரணை கூண்டில் நிற்கும் ராஜலிங்கத்தை வெற்றி மாறன் கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.

‘மிஸ்டர்’ உங்க பேரு?…

என் பேரு ராஜலிங்கம்….

என்ன வேலை செய்றீங்க?…

நான் ஒரு சுதந்திர போராட்ட தியாகிங்க.!…

மகாத்மா காந்தியோட அகிம்சை கொள்கையாள ஈர்க்கப்பட்டு, வெள்ளையர்களுக்கு எதிராக போராடினேன். அதன் நிமித்தமாக, ஜெயிலில் அடைபட்டுக் கிடந்தேன்.

நம்ம நாடு சுதந்திரம் அடைந்ததும் என்னையும் விடுவிச்சுட்டாங்க. அதுக்கப்புறம் விவசாயம் பார்த்து பொழச்சிக்கிட்டு வரேங்கேன்.

‘உங்களுக்கு சுந்தராம்பாள தெரியுமா.? தெரியுமுங்க! என் அக்காள். ஆனால், இப்போ எனக்கும் என் தம்பி வடமலைக்கும் மன்னிக்க முடியாத துரோகத்தை செஞ்சி, எங்களுக்கு துரோகி ஆயிட்டா… என் தம்பியும் அந்த ஏக்கத்துலேயே போய் சேந்துட்டான்.

கடைசியாக உங்க அக்கா சுந்தராம்பாளை எங்க வச்சி பாத்தீங்க.?

என் தம்பி வடமலை சாவுல.!

‘அதற்கு முன் எப்போ பாத்தீங்க’.?

நானும் என் தம்பி வடமலையும், வதிட்டக்குடி மெயின்ரோட்டுல இருக்கிற கோயில் இடத்தை முடிக்கச் சொல்லி,  அஞ்சு லட்சம் ரூபாயை கொடுத்தோம். அதுதான் கடைசியா பார்த்தது.

‘மிஸ்டர்’ ராஜலிங்கம் நீங்க சொன்னதுல பாதி உண்மை.! பாதி பொய்.!

என்ன பொய்யா! ஆமாம் நீங்களும், உங்க தம்பியும் உங்க அக்காவை பார்க்கப் போனது உண்மை. நீங்க ரெண்டு பேரும், அஞ்சு லட்சம் கொடுத்ததா சொல்றது பொய்.

இது என்னக் கொடுமை.? சாமி சத்தியமா அஞ்சு லட்ச ரூபா கொடுத்தோம்.

பொய்! பொய்! நீங்க சொல்றது அப்பட்டமான பொய். நீங்களும் உங்க தம்பியும், அந்த கோயில் இடத்தை வாங்குறத்துக்கு, உங்க அக்காகிட்ட அஞ்சு லட்சம் பணம் கடனாக கேட்டுறிக்கீங்க.! உங்க அக்கா பணம் இல்லைன்னு சொன்னதும், இப்போது அபாண்டமாக பொய் வழக்குப் போட்டு, உங்க அக்காவையும் அவங்க குடும்பத்தையும், அவமானப்படுத்த நினைக்கிறீங்க.!

வக்கீல் வெற்றிமாறனின் வாதத்தைக் கேட்ட ராஜலிங்கத்தின் இதயத்தில், இடி விழுந்த மாதிரி இருந்தது.

பணம் போனதுக் கூடப் பெரிதாகத் தெரியவில்லை. பொய் சொன்னதாக சொன்னதும், ஏமாற்றப்பட்டதும் முள்ளாகக் குத்தியது.

ஒரு காசா…? இரு காசா…..?

அஞ்சு லட்சம் அல்லவா.?

இவர் சொல்றது பொய்! பொய்! என்றவாறு ராஜலிங்கம் அலரத் தொடங்கினார்.

‘மிஸ்டர்’ ராஜலிங்கம் இங்க அழறதாலயோ பொலம்பறதாலயோ ஒரு பிரயோஜனமும் இல்லை.

நீங்க பணம் கொடுத்தது உண்மையாக இருந்தால், யார் சாட்சி.?

நீதிபதி வெங்கடாசலம் நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி கேட்டார். நான் பணம் கொடுத்ததற்கு ஒரே சாட்சி, என் தம்பி வடமலை தான்.

எங்க அக்காவுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்திருந்தால், இவ்வளவு தூரம் கோர்ட் படியேற வேண்டிய அவசியமே இல்லை.!

இதுக்கு மேல நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்லைங்க. என்று சொல்லிவிட்டு ராஜலிங்கம் பார்வையாளர்கள் இடத்தில் அமர்ந்து விட்டார்.

ராஜலிங்கத்தின் வாக்குமூலத்தை கேட்டப் பிறகு, எதிர் தரப்பு வக்கீலான பாண்டியனை வாதாட, நீதிபதி அழைத்தார்.

விசாரணைக் கூண்டில் நிற்கும் சுந்தராம்பாளை, கேள்வி கேட்கத் தொடங்கினான் பாண்டியன்.

‘உங்கப் பேரு?…

“சுந்தராம்பாள்”…

உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா.?…

நான் அந்தக் காலத்து ஆறாங்கிளாஸ்… எனக்கு தமிழ்ல நல்லா எழுதவும் படிக்கவும் தெரியும்….

நீங்க பொறந்த வீட்ல எல்லோருக்கும் எழுதப் படிக்கத் தெரியுமா.?

எங்க அம்மா வள்ளியம்மையைத் தவிர, எல்லோருக்கும் எழுதப் படிக்கத் தெரியும்.

பாண்டியன் சிலப் பழைய காகிதங்களைக் காண்பித்து, இது யாரோட கையெழுத்து என்று தெரியுமா.? என்றான்.

இது! இது! எங்க ஐயா ராமசாமி கையெழுத்து.

‘கரெக்ட்’ என்றான்.

பாண்டியனின் விசாரணையில் குறுக்கிட்ட வக்கீல் வெற்றிமாறன்,  பாண்டியன் வழக்கு சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு, என் கட்சிக்காரரைக் குழப்புகிறார் என்றார்.

இல்லை. ‘யுவர் ஹாணர்’ நான் கேட்கும் கேள்விகளுக்கும் வழக்கிற்கும் சம்பந்தம் உண்டு என்றான்.

அடுத்து ஒரு கையெழுத்தைக் காண்பித்து, இது யாருடையது.? என்றான்.

இது என் தம்பி வடமலையின் கையெழுத்து என்றாள் சுந்தராம்பாள்.

அடுத்து ஒரு காகிதத்தின் முக்கால்வாசி பகுதியை மடித்து விட்டு கடைசியாக இப்படிக்கு ரா.வடமலை என்று எழுதியிருந்த பகுதியை மட்டும் காண்பித்து இது யார் கையெழுத்து? என்றான்.

சுந்தராம்பாள் சிரித்துக்கொண்டே, இதுவும் என் தம்பி கையெழுத்துதான் என்றும், அது மட்டுமல்லாமல் தெளிவாக ரா. வடமலைன்னு, என் தம்பி கையெழுத்தும் இருக்கு என்றாள்.

சரி! நீங்க போகலாம் என்று கூறிய பாண்டியன், தன் தரப்பு வாதம் முடிந்ததாகக் கூறி, கடைசியாக சுந்தராம்பாளிடம் காண்பித்த காகிதத்தை நீதிபதியிடம் ஒப்படைத்தார்.

நீதிபதியும் காகிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தார்.

‘அன்புள்ள அண்ணன்’ ராஜலிங்கத்திற்கும், அக்கா சுந்தராம்பாளுக்கும் தம்பி வடமலை எழுதிக் கொண்டது.

அக்கா நாம் மூவரும் எவ்வளவு அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்தோம்…

உன்னை அக்காவாக எண்ணியதை விட ‘அம்மாவாகவே’ எண்ணி வந்தேன். நீ இப்படியொரு துரோகத்தை செய்வாயென, கனவிலும் நினைக்கவில்லை.

போனது போகட்டும்! நமக்குள் சண்டை சச்சரவு வேண்டாம். நானும், அண்ணனும் வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி சேர்த்து வைத்திருந்த பணத்தை திரும்பக் கொடுத்து விடு.. இல்லையேல், அந்த இடத்தையாவது அண்ணன் ராஜலிங்கத்தின் பெயரிலாவது மாற்றி எழுதி விடு.

அந்தப் பணத்தை வைத்து தான், நானும் அண்ணன் குடும்பமும், எங்கள் எதிர்காலத்தையும் தீர்மானித்துள்ளோம்.

அண்ணா என்னால் துக்கம் தாங்க முடியவில்லை. நம் அக்கா பணமாகவோ அல்லது இடமாகவோ திரும்பிக் கொடுத்தால் நல்லது.

இல்லையேல், இந்தக் கடிதத்தை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விடவும். இது துரோக பூமி.! அக்கா செய்த துரோகத்தை எண்ணி எண்ணி என் இதயம் கண்ணீர் வடிக்கிறது.

நன்றி.!

இப்படிக்கு. ரா. வடமலை.

இவ்வாறாக கடிதத்தைப் படித்து முடித்த நீதிபதி அவர்கள், சுந்தராம்பாளுக்கு ஏழு வருட சிறை தண்டணை வழங்கி, சுந்தராம்பாள் ஏமாற்றிப் பெற்ற நிலத்தை ராஜலிங்கத்திடம் ஒப்படைக்கச் சொன்னார்.

அதுமட்டுமன்றி, சிறப்பாக நீதிக்காக வாதாடிய வக்கீல் பாண்டியனையும் பாராட்டினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கீதைப்படி.

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆயினும் இறுதியில்  தர்மமே  வெல்லும்”..

மகிழ்ச்சி.

– கதைப் படிக்கலாம் – 15

இதையும் படியுங்கள் : ஒரு பத்திரிகை நிருபரின் கனவு!

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கிசான் திட்ட முறைகேடு: யாரையும் விடப்போவது இல்லை – முதன்மைச் செயலாளர் அதிரடி

Next Post

பேஸ்புக் காதல்: வெப் டிசைனரை நிர்வாணமாக்கி மிரட்டி பணம் பறித்த கும்பல்

Next Post

பேஸ்புக் காதல்: வெப் டிசைனரை நிர்வாணமாக்கி மிரட்டி பணம் பறித்த கும்பல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version