Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home படைப்புகள்

ஆட்டோகிராப்….

October 11, 2020
ஆயிரத்து ஐநூறு ரூபாய் இருந்து பல லட்ச ரூபாய் மதிப்பு வரை இன்று சைக்கிள்கள் கிடைக்கின்றன. சிலரால் நினைத்த நேரத்தில் சைக்கிள் வாங்கி விட முடிகிறது. குழந்தைகள் இருக்கின்ற வீடுகளில் பெரும்பாலும் சைக்கிள்கள் இருக்கின்றன. ஆனால் இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இல்லை. வாடகை சைக்கிளில் ஆரம்பித்து, செகண்ட்ஹேண்ட் சைக்கிள் வாங்கி வாய்ப்பும், அதிர்ஷ்டமும் இருந்தால் புது சைக்கிள் படிநிலையை அடைய முடியும். வெயில், மழை பாராது வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றி அனுபவங்களை இன்றும் 80’ஸ், 90’ஸ் கிட்ஸ்கள் கதை கதையாகச் சொல்வார்கள். செய்தி அலை சமூக வலைதளத்தில் கேட்கப்பட்ட கேள்வியும் வாசகர்கள் அளித்த பதில்களும்…

கேள்வி :

முதன்முதலா எப்போ சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டீங்க.. யார் கத்துக்குடுத்தா? அப்ப அடிபட்ட காயம் எதும் இருக்கா?

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

காலமானார் கன்னடத்துப் பைங்கிளி!

மாஜிஸ்ரேட் விசாரணைக்கு உத்தரவு!

ராஜசேகர்:

Uncle… 2 தடவ விழுந்தேன் bro… just சிராய்ப்பு தான்… அப்புறம் பழகியாச்சு…
உங்களுக்கு?!!

கணேஷ், கடலூர்:
முதல் முதலாக எங்கள் ஊருக்கு (அறந்தாங்கி அருகில் சுப்பிரமணியபுரத்தில்) மாமா வீட்டுக்கு லீவுக்கு போனபோது….

அங்கே மெயின் ரோட்டில் ஒரு மேடு இருக்கும் அதன் உச்சி வரை சைக்கிளை தள்ளிக்கொண்டே போய் மேட்டில் இருந்து குரங்கு பெடல் போட்டு ஓட்டி கற்றுக் கொண்டது தான் முதல் முறையாக…

அப்போது ஏற்பட்ட காயம் எல்லாம் எச்சில் வைத்து ஆறி விட்டது… அதன் வடு கூட இப்போது இல்லை. ஞாபக சுவடு மட்டும் மாறாமல் இப்போதும் இருக்கிறது

ஸ்ரீதர் கிருஷ்ணன்:

அண்ணன் அவரின் நண்பர்களும் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார்கள். ஒரு தடவை சைக்கிள எங்க அண்ணன் friend மேலே விட்டு அவருக்கு அடி நான் எஸ்கேப்பு. நெல்லை ஆர்ச்ல இருந்து ஈரடுக்கு மேம்பாலம் கீழ் பாலம் முடியும் வரை கைய விட்டு ஓட்டுவேன்

போரூர் கார்த்திக்:

யார்னு நினைவில்லை வாடக (கொக்கு) சைக்கிள் எடுத்து வேகமா ஓட்டி கீழ விழந்து இருக்கேன் காயம் தழும்பு இல்ல.

கோகிலா:

8ஆவது படிக்கும் போது அப்பா கத்துக் குடுத்தார். ஒரு வாட்டி கீழ விழுந்து கண்ணக் கட்டிக்கிட்டு வந்து, கைல அடிபட்டது மறக்கவே முடியாது.. அப்புறம் பல தடவ பல எடத்துல விழுந்திருக்கேன். சொல்லிக்கிற மாதிரி பெரிய அடிலாம் ஒன்னும் இல்ல. அப்போலாம் வாடகை சைக்கிள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபா தான்.. அதுவும் 10நிமிசம் கழிச்சு விட்டுக்கலாம்.

அம்மைநாதன் சித:

நானெல்லாம் நானா கத்துகிட்டேன்.. கத்துக்கிட்ட இடம் சோழவந்தான்.. பல முறை விழுந்து புதையல் எடுத்திருக்கேன்.. தழும்பு எதும் இல்லை..

நந்தகுமார் :
எங்க ஊருல அப்போ தான் மண் ரோடுலாம் தார் ரோடா ஆச்சி. அந்த ரோரூட்ல ஓட்டறதுனாலே செம குஷி யா இருக்கும்.
அப்படி வேகமா ஓட்டுறேன்னு விழுந்து காயம் நெறய பட்டிருக்கு.இன்னும் வீர தழும்பா இருக்கு.

அருணா ரவி:
அப்பா தான் கத்துக்கொடுத்தாங்க.. முதல் புதையல் சாக்கடை குழி.. அப்புறம் பலமுறை திருப்பத்தில் விழுந்து .. முட்டிய பேத்துகிட்டேன்..

நித்யா:

ஃபோர்த் ஸ்டான்டர்ட்ல தெரிஞ்ச அண்ணா வாடகைக்கு சைக்கிள் எடுத்து வந்து ஓட்ட கத்துகுடுத்தாங்க. அது ஒரு ரெட் கலர் அட்லஸ் சைக்கிள். கீழ விழுந்ததா நினைவில்ல. நல்லா ஓட்ட ஆரம்பிச்சப்றம் விடாம மணிக்கணக்கா ஓட்டி காய்ச்சல் வந்த கதையெல்லாம் இப்ப கூட எங்க அம்மா என் பொண்ணு கிட்ட சொல்லி சிரிப்பாங்க.

தேவ் ஆனந்த் :
11 வயசுல, நானா தெரு முகனைல சின்ன மேட்டுல சைக்கிள ஏத்திட்டு போய், அங்க இருந்து வேகமா இறங்கும்போது கொஞ்சம் கொஞ்சமா ஒட்டி பழகினேன். வாடகை சைக்கிள் மருது மாமா எனக்கு சைக்கிள் free ya வேலை பாத்து கொடுப்பாரு. டியூஷன் பொண்ணுங்க எல்லாம் சைக்கிள வருவாங்க. எனக்கு ஓட்டத் தெரியாது. அதான் நானா கத்துகிட்டு டியூஷன் lady bird cycles முன்னாடி முந்தி ஓட்டி போய் கை விட்டு ஓட்டிக்கிட்ட சர்ட் பட்டன்லாம் போட்டு சீன் காட்டுவோம்.

பமீலா :
அண்ணன் சொல்லி
தந்தான். 7 வது வகுப்பு படிக்கும் போது…

கல்பனா:
சைக்கிள் என்னோட ஃப்ரென்ட் மஞ்சு சொல்லி குடுத்தா… ஓட்டி பழகி விட்டவ இறங்க ஒரு மணல் மேட்டுல தள்ளி விட்டுட்டா… இரண்டு முட்டிலயும் இன்னும் தழும்பு இருக்கு… ஸ்கூட்டி, கார் ஓட்டினாலும் இன்னும் என்னோட lavender color lady bird எனக்கு spl…

அகிலா குணாளன்:
5 ஆவது படிக்கும் போது ஓட்ட கத்துக்கிட்டேன். ஊரில் அவர் சைக்கிள் இருக்கும் ஒரு மணி நேரத்துக்கு 1 ரூவா. கோடை விடுமுறை எங்களுக்கு வேலையே ஊர் காசு சேர்த்து சைக்கிள் பழகுவது. நான், தங்கை, மாமா மகள், பசங்க 2 பேரு எல்லாரும் சேர்ந்து கத்துகிடோம். அடி என்று சொல்லணும் என்றால், ஒரு முறை சாக்கடையில விழுந்தேன் சைக்கிளோட . முதல்ல ஒரு சைக்கிள் தான் வாங்கி கொடுத்தாங்க. எனக்கும் தங்கைக்கும் போர் தான் தினமும் , அவ பத்திரமா தொடச்சி எல்லாம் வைத்து அம்மா விடம் அந்த சைக்கிள் அவளுடயது என்று ஆக்கி கொண்டாள். ஆறு மாதம் கழித்து புது சைக்கிள் வந்தது கேரியர். side ஸ்டண்ட் எல்லாம் வெச்சு, அவ சைக்கிள்ல அதெல்லாம் இல்ல.. ஒரு அல்ப சந்தோசம். பழகியது சமண மலை ஆல மரத்து நிழலில் ..

சிவகாமி:
நானெல்லாம் சைக்கிள் ஓட்ட பழகும் போது வாடகைக்கு எடுப்போம் ஒரு மனி நேரத்துக்கு 1ரூபாய்.

என்னுடைய பள்ளித்தோழிதான் கத்துக்கொடுத்தா. ஒரு கல்லுமேல கால வச்சு சைக்கிளில் காலைத்தூக்கி போட்டு மேட்டில் இருந்து விடுவா. அப்படியே ஸ்விங்குனு வண்டி ஓடும் அப்படி ஒரு சந்தோசம். அவ பின்னாடியே ஓடி வருவா. இப்படி ஒருமுறை அவ பின்னாடி வருகிறாளானு திரும்பி பார்த்தேன். அவ அங்கேயே நிக்கிறா. அப்படியே விட்டேன் வண்டிய ஒரு முள்ளு புதரில். அவ வந்து முதலில் சைக்கிளைத் தூக்கி பஞ்சர் ஆயிடுச்சானு பார்த்தாள். நான் முள் புதரில்.

“ஏபிள்ள என்ன தூக்கமா சைக்கிள தூக்கின”னு கேட்டேன். அதற்கு அவ, “பஞ்சருக்கு 5 ரூபா காசு கொடுக்கணும் பிள்ள. அதான் பார்த்தேன். நல்ல வேல ஒன்னும் ஆகல வா போவலாம்” என்று கூட்டி போய் அவுக வீட்டில், அவுக அப்பா கம்பவுண்டர் டிஞ்சர் போட்டு விட்டாங்க அப்பத்தாகிட்ட சொல்லாதே அப்புறம் சைக்கில் எடுக்க விடாதுனு சொல்லிட்டு நானே உளறிட்டேன்.
பொம்பளப்பிள்ள இப்படி கைய கால ஒடச்சுக்கிட்டா என்ன பண்ணுறது.
இனி ஓட்டு நானே உன் கால உடைக்கிறேன்.

சொன்ன ஐந்து நிமிடம் கழித்து சைக்கிளில் பறந்து கொண்டே அப்பத்தாவிற்கு டாடா சொன்னேன்

“அடிங் இன்னைக்கு வீட்டுக்கு வா….” இன்னைக்கு நினைத்தாலும் சிரிப்பு வருது. பரிமளா வாழ்க அவதான் என் தோழி.

மதிநிறைசெல்வன் :
நாலாவது படிக்கும் போது பக்கத்து வீட்டு அக்காவுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்து தரனும். லிஸ்ட் எழுதி குடுப்பாங்க.. மளிகை கடைல குடுத்து வாங்கிட்டு வந்து குடுத்தா ஒரு ரூபாய் தருவாங்க.. அதுவும் சைக்கிள் தான் ஓட்டனும்.. யாரு‌ம் கற்றுத் தரல.. எனக்கு நானே விழுந்து விழுந்து தான் கத்துகிட்டேனே.. காயமெல்லாம் ஒன்னுமில்லை.. இப்டி வாரவாரம் ஓட்டி பழகினது. இதெல்லாம் இப்ப வரைக்கும் வீட்டுக்கு தெரியாது.

லாஸ்யா:
நான் ஏழாவது படிக்கும்போது ஃப்ரண்ட்ஸ் ,அப்புறம் என் தம்பி இவர்கள் மூலம் சைக்கிள் கத்துகிட்டேன். நான் கொஞ்சம் ஸ்பெஷல் ஏன்னா எல்லோரும் அவர்களின் ரைட் சைட் தானே சைக்கிளில் ஏறுவார்கள். நான் லெப்ட். நிறைய பேர் இப்படி சைக்கிள் ஓட்டிப் போகவே முடியாதுனு சொல்லிருக்காங்க. ஒருதடவை சைக்கிள் கொரங்குப்பெடல் ஓட்டும்போது என் சின்னத்தம்பி கல்லெடுத்து என்மேல எறிந்தான். அதுல விழுந்து ஹேண்டில் பார் நெஞ்சுல குத்தி மயங்கி விழுந்துட்டேன். அப்பா தூக்கிட்டு வந்து ஒரே களேபரம் வீட்டில். அப்புறம் தம்பிக்கு அடா விழுந்தது தனி எபிசோட்.

நாராயணமூர்த்தி, துபாய்:

மூன்றாவது படிக்கும் போது கத்துக்க ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ல கத்துக்கிட்ட, சின்ன சைக்கிள் ஒரு ருபாய் ஒரு மணிநேரம் வாடகை, அரைமணிநேரம் ஸ்டேண்ட் போட்டு ஓட்டிட்டு இருப்பேன் , யாராவது ஸ்டேண்ட் எடுத்து விட்டுடுவாங்க அப்பறம் என்ன முட்டில பல காயம், வாடகைக்கு எடுத்து தள்ளிட்டு போவேன் சைக்கிள் ல சொன்னேன் , அப்பறம் பெரிய சைக்கிள் அறைபெடல், முக்கால் பெடல் போட்டு கத்துக்கிட்ட நெறைய சில்ற வாங்கி இருக்கேன்

உங்களின் அனுபவங்களையும் கமெண்ட் பண்ணுங்க மக்களே..

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தொடர்கிறது மும்பை அணியின் வெற்றி பயணம்:5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

Next Post

தேஜஸ் சிறப்பு ரயில் – விவரங்கள்

Next Post

தேஜஸ் சிறப்பு ரயில் - விவரங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version