– ர. உஷாராணி
“ஏண்டி பவித்ரா, மணி என்னாகுது பாத்தியா? எழுந்திருடி!”
“வீட்டு வேலைலாம் அப்படியே இருக்கு!
“நான் ஒருத்தியே எத்தனை வேலைகளைப் பாக்குறது எழுந்திருடி”, என்றாள் கோகிலா.
“அத்தை! இன்னும் ஒரு பத்து நிமிஷம் ப்ளீஸ்!” என்றாள் பவித்ரா.
“ஏண்டி வயசான காலத்துல ஒருத்தியே காலைல இருந்து எத்தன வேலையத்தான் பாக்குறது… எழுந்து வாடி”
“அப்பறம் உனக்குத்தான் ஆபீஸ்க்கு போக லேட்டாகும்”
“ஆல் ரெடி என் பையன போய் டிராப் பண்ணிட்டு வந்தேன்”
“இப்ப உன்னையும் அழச்சிட்டுப் போய் விடனும். சீக்கிரம் வாடி” என்றாள் மறுபடியும்!
பவித்ரா எதுவும் கேக்காத மாதிரி மறுபடியும் உறங்கிப் போனாள்!
“தன் கணவனை இழந்து, யாருடையத் துணையுமின்றி, பிள்ளைகளான, வரதன், சுனிதா இருவரையும் வளர்த்து, தன் மகனுக்குப் பிடித்த பெண்னையே அவனுக்குத் திருமணம் செய்து வைத்து, மற்ற மாமியார்களைப் போல் அல்லாமல், இந்தக் காலத்திற்கு ஏற்ற வகையில், தன்னை மாற்றிக் கொண்டு, மருமகளையும், மகளாய் பார்த்து, இன்றைய தலைமுறைக்கு ஏற்றாற்போல வாழ்ந்து வருகிறாள் கோகிலா”
மணி எட்டைத் தொட்டது.
பவித்ரா கண் விழித்து, ஆபீஸ்க்குப் புறப்படத் தயாரானாள்.
“நான் உனக்குத் தேவையான டிபன், சாப்பாடு எல்லாம் ரெடி பண்ணிட்டேன். போயி சாமிக் கும்பிட்டு வந்து, சாப்பிட்டு கிளம்பலாம் வாடி” என்றாள் கோகிலா.
“சரி அத்த. ரெண்டே நிமிஷம். சாமி கும்பிட்டு வந்திடுறேன்” என்று பூஜையறைக்குச் சென்றாள் பவித்ரா.
அதற்குள் கோகிலா, பவித்ராவை டிராப் செய்ய வண்டியைத் தயார் செய்தாள்.
வழக்கம் போல காலை உணவு முடிந்து, இருவரும் ஆபீஸ்க்குக் கிளம்பினார்கள்.
“பாத்தியாடி, ரோடுலாம் ஒரே டிராஃபிக். கொஞ்சம் சீக்கிரம் எழுந்தா குறஞ்சாப் போயிடுவ” என்றுத் திட்டினாள் கோகிலா.
“ஸாரி அத்தை” என்றாள் பவித்ரா மெல்லியக் குரலில்.
“ஆமாண்டி… இந்த ஒத்த வார்த்தைய வச்சிட்டு, நல்ல ஐஸ் வைங்க எனக்கு” என்றாள் கோகிலா.
“அத்த கீரின் சிகனல். போங்க போங்க” என்றாள் பவித்ரா.
ஒரு வழியாக இருவரும் ஆஃபீஸ் வந்தனர்.
இறங்கிய அவசரத்தில் லஞ்ச்ப் பையை மறந்தாள் பவித்ரா.
“பவி நில்லுடி. இந்தா லஞ்ச பேக்” என்று கையில் கொடுத்து, தலையில் ஒரு குட்டு வைத்தாள் கோகிலா.
“ஸாரி அத்த. ஐ லவ் யூ. பை, பை” என்றுக் கூறிக் கிளம்பினாள் பவித்ரா.
“பை, பை டியர்! லவ் யூ டூ” என்றுக் கூறி கோகிலாவும் கிளம்பினாள்.
அங்கே வந்த பவித்ராவின் புது தோழி “அது யாரு? இவ்ளோ டீப்பா பேசிட்டுப் போறாங்க?” என்று வினவினாள் ஸ்ருதி.
“அவங்க என் மாமியார்” என்றுக் கூறிய பவித்ராவை, வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.
“என்னது மாமியாரா? என்னடி சொல்ற?” என்றாள் ஸ்ருதி.
“அட! ஆமாடி. அவங்க என் மாமியார்தான். பட்… ஸி இஸ் மை பெஸ்ட்” என்று சொன்னவளை வாய்ப் பிளந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.
“என்னால நம்பவே முடிலடி. இந்தக் காலத்துல இப்படி ஒரு மாமியாரா?” என்றாள் ஸ்ருதி.
“ஆமாடி. இவங்க என் மாமியார் மட்டுமில்ல, எனக்கு இன்னொரு அம்மா! இன்னொரு தோழி. இன்னும் நிறைய சொல்லிட்டேப் போகலாம்” என்றவளை ஆச்சரியத்தோடுப் பார்த்தாள் ஸ்ருதி.
“இன்ட்ரஸ்டிங்க்” என்றாள் ஸ்ருதி.
“இதுக்கே இப்படின்னா, அவங்களப் பத்தின நிறைய விஷயங்களை ஷேர் பண்ணா, நீ இன்னும் ஷாக் ஆகிடுவ. பேலன்ஸ நாம லஞ்ச் டைம்ல் பேசலாம். இப்ப வேலையப் பாக்கலாம்” என்றாள் பவித்ரா.
வேலைப் பளு அதிகமாக இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.
மணி இரண்டைக் கடந்தது.
“பவி வாடி சாப்பிடப் போகலாம். பசிக்குது” என்றாள் ஸ்ருதி.
“டூ மினிட் டி. வரேன்” என்றாள் பவித்ரா.
இருவரும் ஒரு வழியாய் சாப்பிட்டு முடித்தனர்.
இன்னமும் கால் மணி நேரம் இடைவெளி இருந்தது.
“பவி உங்க மாமியார பத்திச் சொல்லேன். ப்ளீஸ்” என்றாள் ஸ்ருதி.
“அவங்கதான் என்னோட பெஸ்ட்” என்றுக் கூறிக்கொண்டு இருக்கும் போதே, பவித்ராவின் செல்போன் சினுங்கியது.
“ஒன் மினிட். என் அத்த” என்று பேசத் தொடங்கினாள்.
“சொல்லுங்க அத்த. நான் இப்பத்தான் சாப்பிட்டு முடிச்சேன். நீங்க எங்க இருக்கீங்க” என்றாள் பவித்ரா.
“அசடு. இது மதியம் மூணு மணி ஆகுது. இப்பக் கடைவீதில இருக்கேன். வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்லாம் வாங்க வந்தேன். உனக்கு ஏதாவது வேணுமா” என்றாள் கோகிலா.
“இல்ல அத்த. எனக்கு எதும் வேண்டாம். சுனிதா தான் ஏதோ வேணும்னு கேட்டுட்டு இருந்தா. நீங்க அவக்கிட்ட கேட்டுப் பாருங்க” என்றாள் பவித்ரா.
“சரி. பை, பை” என்றுக் கூறிப் ஃபோனைக் “கட்” செய்தாள் கோகிலா.
“என்ன சொல்லிட்டு இருந்தேன். ம்…ம்… என் மாமியார் மாதிரி சூப்பர் பர்ஸ்ன் யாரும் இருக்க மாட்டாங்க. அவங்க எங்கம்மாவுக்கு ஒரு படி மேல” என்றாள் பவி.
“ஏண்டி, அவங்க என்ன உனக்கு சொந்தமா?” என்றாள் ஸ்ருதி.
“இல்லையே! நாங்க லவ் மேரேஜ்” என்றவளை மீண்டும் ஷாக்குடன் பார்த்தாள் ஸ்ருதி.
“என்னது? லவ் மேரேஜா? எனக்குத் தலையே சுத்துதுடி.! லவ் மேரேஜ் பண்ண உனக்கு இப்படியொரு மாமியாரா? என்றாள் ஸ்ருதி.
“எஸ்ஸ். அவங்க சின்ன வயசுல இருந்தே ரொம்ப கஷ்டப்பட்டவங்கடி… பாவம்”.
“இளம் வயசுலையே கணவனை இழந்து, ரெண்டுப் பிள்ளைகள, யார் துணையும் இல்லாம வளர்த்து இருக்காங்க”
“நல்லா படிச்சிருக்காங்க. எவ்வுளவுதான் படிச்ச பொண்ணாயிருந்தாலும், ஒரு ஆண் துணை இல்லாமயிருந்தா இந்த சமுதாயம் எப்படில்லாம் பேசும்! இவங்க அதப் பத்தில்லாம் கவலப்படாம, தன் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்தாங்க. எங்க லவ் தெரிஞ்சி எங்க வீட்டுல வந்துப் பேசி சம்மதம் வாங்கினாங்க”
“இவங்கக் கூட வந்தப் பிறகுதான் தெரிஞ்சது, மனசளவுல எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்காங்கனு. ரொம்பத் தைரியமானவங்க. ரொம்ப அன்பானவங்க”
“இப்பக்கூட, இந்த வயசுலையும், ஆதரவற்றவங்களுக்கு உதவி பண்றாங்க. குழந்தைக படிப்புக்குனு யார் வந்தாலும், தன்னால முடிஞ்ச உதவிகள பண்றாங்க. சமூகப் பணிகள் நிறைய பண்றாங்க. நிறைய விருதுகளும் வாங்கி இருக்காங்க.”
“நான் என் அம்மா வீட்டுல இருந்தத விட இங்க ரொம்ப சந்தோஷமா இருக்கேண்டி. பெண்களுக்கான தன்னம்பிக்கைகள், பெண்களுக்கான முயற்சிகள், பெண் கல்வியின் முக்கியத்துவம் இது பத்தில்லாம் நிறைய எழுதி இருக்காங்க”
அவங்களைப் பத்தி இன்னும் நிறைய சொல்லிட்டேப் போகலாம்.
அவ்வளவு ஏன்? வயசாகிப் போச்சி. நீங்க எதுக்கு டூ வீலர்லாம் ஓட்டுறீங்கணு சொன்னதுக்கு, “என்னது எனக்கு வயசாகிப் போச்சா? இன்னும் ஒரு வாரத்துல வண்டி ஒட்டக் கத்துக்கிட்டு, உங்கள நானே ஆபீஸ்க்கு கூட்டிட்டுப் போயி விடுறேன் பாருனு சொல்லிட்டு, சொன்ன மாதிரியே வண்டி ஓட்டக் கத்துக்கிட்டாங்க. என்னையும், என் வீட்டுக்காரரையும் அவங்கத்தான் டெய்லியும் ஆபீஸ்க்கு கொண்டு வந்து விடுறாங்க” என்றாள் பவித்ரா.
பேசிக் கொண்டு இருந்ததில் டைம் போனதே தெரியவில்லை.
“சரி வாடி டைம் ஆச்சி. போயி மத்த வொர்க் எல்லாம் முடிக்கலாம்” என்றாள் பவித்ரா.
மாலை நேரமானது.
“அத்த நான் ஆபீஸ்லருந்து கிளம்பிட்டேன். வர்றீங்களா?” என்று வினவியவளை “டர்ன் லெஃப்ட் ப்ளீஸ்” என்றுக் குரல் ஒலிக்க, பக்கத்திலே மாமியார் கோகிலா வண்டியில் வந்து நின்றாள்.
“அத்த. மீட் மை நீயூ ஃப்ரெண்டு ஸ்ருதி” என்றுக் கூறி அறிமுகம் செய்தாள்.
“ஹாய் ஸ்ருதி. நைஸ் டூ மீட் யூ. அண்டு ஸாரி வில் மீட் எகேன். இப்பக் கொஞ்சம் அவசரமா போக வேண்டியிருக்கு. இன்னொரு நாள் சமத்தாப் பேசலாம்” என்றுக் கூறி கிளம்பலானாள்.
“சரிடி. நான் வரேன். அத்த நாம் எங்கப் போகணும்?” என்றுக் கேட்டாள் பவித்ரா.
“நீ ஏதோ மேக்கப் கிட் வாங்கணும்னு சொன்னீயே, பேன்ஸி ஸ்டோர்க்குப் போயிட்டு வாங்கிட்டு, அப்படியே சுனிதாவையும் பிக்கப் பண்ணிட்டு, வீட்டுக்குப் போயிடலாம்” என்றாள் கோகிலா.
“ஓ.கே. அத்த. டபுள் டண்” என்றுக் கூறி வண்டியில் சென்றவர்களைப் புன்னகையுடன் பார்த்த ஸ்ருதி, “பவி நீ குடுத்து வச்சவடி.. நம்ம உணர்வுகளுக்கு மதிப்புக் குடுக்குற எந்த உறவா இருந்தாலும், நம்ம வாழ்க்கையில எப்படியும் ஜெயிச்சிருலாம்டி”…
“ஷீ இஸ் தி சூப்பர் உமென்” என்று மனதிற்குள் பேசிக்கொண்டாள் ஸ்ருதி!
– கதைப் படிக்கலாம் – 83
இதையும் படியுங்கள் : விடியல்