செய்தி அலை இணையதளம் நடத்திய சிறுகதைப் போட்டியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
செய்தி அலை இணையதளம், சிறுகதை போட்டி பற்றிய அறிவிப்பு ஒன்றை சில மாதங்களுக்கு முன்பாக வெளியிட்டது. போட்டியை குறித்தான அறிவிப்பு வெளியான ஆரம்பம் முதலே, பலரும் ஆர்வத்துடன் கதைகளை அனுப்பத் தொடங்கினர். எனவே முதலாவதாக, சிறுகதைப் போட்டியில் கலந்துக்கொண்ட எழுத்தாளர்களுக்கும், அதை வாசித்து உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் செய்திஅலை சார்பாக நெஞ்சார்ந்த அன்பும், நன்றிகளும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கதைகளின் தொகுப்பு :
போட்டிக்குக் கிட்டத்தட்ட 200 கதைகள் வந்தன. அவை ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்றபோதும், பல கதைகள் ஒரே ரகத்தில் இருந்தன என்று தான் சொல்ல வேண்டும். பல கதைகள் ஆர்வத்தை தூண்டி நம்மை உள்ளே இழுத்துச் சென்று, ஏமாற்றம் அளித்தன. பல கதைகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. பலரும் உண்மைச் சம்பவங்களை கதைகளாக சொல்லி இருந்தீர்கள். பல கதைகள் சிறுகதை வடிவத்தில் இருந்து, திடீரென நாடக பாணிக்கு மாறியதால், படிப்பதற்குச் சிரமமாக இருந்தது. பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமியரும் போட்டியில் ஆர்வமுடன் பங்குபெற்றது கூடுதல் சிறப்பு.
வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் :
கதையின் அமைப்பு, மொழிநடை, கதை பேசும் விஷயங்கள், கரு, கதையின் அழகியல் உள்ளிட்டவற்றை தகுதிகளாக கொண்டு, கதைகள் வடிகட்டப்பட்டன. அதிலிருந்து முதல் மூன்று கதைகளை தேர்ந்தெடுப்பதென்பது சிக்கலான விடயமாகவே இருந்தது. தேர்ந்த எழுத்தாளர்களைப் போல உங்கள் எழுத்துகள் இருந்தன.
போட்டியில் நடந்த ஒரு சம்பவம் :
இங்கு இதைச் சொல்லியே ஆக வேண்டும். போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டும், பரிசு பெற வேண்டும் என்கிற ஆர்வத்தில், எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்களின் பரிசு பெற்ற சிறுகதை ஒன்றை ஒருவர் அனுப்பி இருந்தார். முகநூலில் பதிந்தப் பின் அக்கதை நீக்கப்பட்டது. இது போல வேறு கதைகள் இருக்காது என நம்புகிறோம். ஒருவேளை அப்படி ஏதேனும் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க நடந்தப் போட்டியாகும். இதை இங்கு பதிவிட காரணம், இதுப்போன்று வேறொரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே.
முக்கிய அறிவிப்பு :
திறமைசாலிகளை ஊக்குவிக்கும் வகையில் செய்தி அலையால் தொடர்ந்து பல போட்டிகள் நடத்தப்படும். இணைந்திருங்கள். விரைவில் இன்னுமோர் அறிவிப்பு காத்திருக்கிறது.
பரிசு வென்றவர்கள்:
பரிசு சிறுகதை தலைப்பு எழுத்தாளர்
முதல் பரிசு விடுதலை திருமதி. சாந்தி சரவணன்
இரண்டாம் பரிசு வண்டிகாரம்மா திரு. எம்.ஜி.கன்னியப்பன்
மூன்றாம் பரிசுகள் அகத் தீ திரு. ராகேஷ்
புல்வெளிப் புழு திரு. திலிப்குமார்
செய்தி அலை சிறுகதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்துக் கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்.
இதையும் படியுங்கள் : கொட்டும் மழையிலும் சாலையில் அடிபட்டுக் கிடந்த முதியவருக்கு முதலுதவி அளித்த அமைச்சர்…