– எம். ஜே. ஸ்டெல்லாமேரி
லின்சி இங்கும் அங்கும் பரபரப்பாய் ஓட ….!
இதைக் கவனித்த பூஜா, ஏய்…ஏய்… ஏண்டி, இப்படி பரபரன்னு இருக்க!…. அப்படி என்னத்த தான் தேடுற… “ம்ம்”, பூஜா கேட்க…!
அய்யோ முக்கியமான ஃபைலை காணலடி… அதான்! அந்த ஆளுக்கிட்ட, ஃபைலை காணும்-னு சொன்னா போதும்… நான் அவ்வளவு தான்… ஏற்கெனவே என்னை கண்டாலே எரியும்… இதுல…! ஃபைலை காணலைனு சொன்னா, வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கத் தான் போறான் அந்த மேனேஜர்-னு, லின்சி லேசாய் கடுப்பாய் சொல்ல…!
இதைக் கேட்ட பூஜா… ஹா… ஹா-னு, குலுங்கி குலுங்கி சிரிக்க..!
ஏன்டி சிரிக்கற.. லின்சி கோபமாய் கத்த…!
சரி, சரி கோபப்படாதடி… அந்த மேனேஜரை நான் பார்த்துக்கிறேன்
என்ன..!! நீ ஒண்ணும் கவலைப்படாத… ம்ம்… பூஜா கண்ணை உருட்டி, உருட்டி கேட்க..!
எப்படி… எப்படி… அந்த மேனேஜர், உம் பேச்சை கேட்பதாவது! அவன்.. தான் அங்க எல்லாம்..! அப்புறம்.. எப்படி!?
ஏய், நீ… அவன்… வலையில-னு லின்சி இழுக்க..!
அட… வாய மூடுடி-னு பூஜா கடுப்பாக…!
பின்ன எப்படி..?? ம்ம்……. என்று லின்சி கேட்க..!
அந்த சுடுமூஞ்சி மேனேஜர், என்னிடம் ஒரு விஷயத்தில் வசமா மாட்டிட்டு இருக்கார், அதான்!
என்ன? என்னன்னு? லின்சி கண்களை விரித்தபடிக் கேட்க..!
ம்.. அது சஸ்பன்ஸ், அப்புறம் சொல்லுறேன்.. என்ன? நீ ஒண்ணும் கவலைப்படாத. இங்க, எங்கையாவது தான் இருக்கும், பொறுமையா தேடிப்பாரு என்ன? ம்ம்… லின்சி..!
இருவரும் உயிர் தோழிகள். சொந்த ஊரை விட்டு, வேறு வேறு வேலையின் காரணமாக, ஒரே ரூமில் தங்கும் சூழல். ஒரு கட்டத்தில் லின்சி, பூஜாவின் கம்பனியிலே ஜாயின் பண்ணும் நிலை வந்தது..!
இருவரும் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றார்கள்.. என்ன, மேனேஜருக்கு லின்சிக்கும் ஒத்து வராது…!
அப்ப.. அப்ப, சின்ன.. சின்ன.. உரசல்கள், மோதல்கள் எழுவதும், அதையெல்லாம் பூஜா தான் சரிப்பண்ணுவாள்…!!
இருவரின் நல்ல குணத்தையும் பார்த்த வள்ளி, மிகக் குறைந்த வாடகைக்கே ரூம்-ஐ கொடுக்க, சந்தோஷமாய் ஒவ்வொரு நாட்களையும் கழித்துக் கொண்டு இருந்தார்கள்…!
வெளியே ஏதோ சத்தம் கேட்க.. என்ன-னு, தன்னுடைய ஹேன்ட் பேக்கை சோஃபாவின் மேல் வைத்து விட்டு எட்டிப் பார்த்தவளுக்கு, இதழில் நீளமானப் புன்னகையுடன், பூஜாவை நோக்கி ஓடி வந்தாள் லின்சி…!
என்ன லின்சி அப்படி ஒரு புன்னகை… ம்ம் பூஜா கேட்க..!
நம்ம மேல் வீட்டுப் போர்ஷனுக்கு ஆள் வராங்கப்பா, அதான்… லின்சி சொல்ல..!
அப்பாடா, இனி பயமில்லாம நைட்டு லேட்டா வரலாம்.. இல்ல-னு பூஜா கேட்க..!
ஆமா பூஜா-னு.. லின்சி சொல்லிட்டு..!
மேலே படிகட்டில் ஏறும் அமுதாவை லின்சி அழைக்க…!
அமுதாவும் மெல்லியதாய் ஒரு புன்னகையை வீச, அமுதாவின் பின்னாடி இருந்து, இரு மீன் கண்கள் லின்சியை முறைக்க…!
அட யாரு இந்த வாலு-னு லின்சி கேட்க..!
என் பொண்ணு தான்.. ஒரே பொண்ணு…. பல வருடத்துக்குப் பிறகு பொறந்தவ… அதனாலையே இவளைப் பொத்தி பொத்தி வளர்க்கும் எண்ணம் எல்லாம் இல்லை…! அவள் விருப்பம் போல் வளர்க்க வேண்டும், அப்ப தான் நல்லா அறிவாகவும், திடமாகவும் திகழ்வாள்.
பின்னாடி அமுதா சொல்லிட்டு மேலே போக..! அந்த வாலு லின்சியின் ரூமை ஆதிக்கம் பண்ண, தினமும் அங்கே தான் இருப்பாள், கிர்ஜா குட்டி…
அதுவும் அவள் அனிந்திருக்கும் கொலுசோ மிகவும் அழகாகவும்,
அந்த சத்தத்தில் சிறுவயதுக்கே போனதுப்போல் இருவரும் இருப்பார்கள்..!
ஏதோ, தங்களுக்கு ஒரு குட்டி தங்கை இருப்பது போல், இருவரும் நினைக்கும் அளவுக்கு நெருக்கமாக பழகினார்கள்…!
கிர்ஜாவோ…துரு…துரு-னு இருப்பது, அந்த வீட்டின் சொந்தக்காரியான வள்ளிக்கு பிடிக்கவே இல்லை…!
ஒரு நாள் கிர்ஜா, வள்ளியின் வீட்டுக்குப் போக… என்ன என்பதுப்போல் கேட்டுட்டு, வாசலோடே அனுப்பியதை அமுதா கவனிக்க…! ஒரு வித மனக் கலக்கத்துடனே அன்று கழிந்தது..!
ஒரு வாரம் கம்பனி விஷயமா வெளியூர் போயிட்டு வந்த லின்சியும், பூஜாவும்!!
கிர்ஜாவுக்கு கைநிறைய பொம்மைகளுடனும், வாயில் திணிக்கத் திண்பண்டங்களையும் அள்ளிக் கொண்டு வந்தவர்களுக்கு… கிர்ஜாவும் அமுதாவும் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டுப் போனார்கள்..!
என்ன இது!! என்ன இது!!-னு லின்சியும், பூஜாவும் வள்ளியிடம் கேட்க…
என்ன-னு தெரியல கண்ணுகலா… திடிர்னு காலிப்பண்ணிட்டு போயிட்டாங்க..!
நா என்ன தடுத்து நிறுத்தவா முடியும்… போனா போகட்டும்… இந்த வாடகைக்கு வேற யாராவது விடுவாங்களா.. வள்ளி முணுமுணுத்தப்படி உள்ள செல்ல..!
எதையோ இழந்ததுப் போல் இருவரும் படியிலே அமர்ந்து, லேசாய் தேம்ப..!
இதைக் கவனித்த வள்ளியின் பேரன், லின்சியின் அருகே வந்து, அழாதீங்க..!
கிர்ஜாவையும், அமுதா ஆண்டியையும் எங்க பாட்டிதான் திட்டி அனுப்பிட்டாங்க… அதான் அவங்க உடனே காலிப்பண்ணிட்டு போயிட்டாங்க…
அந்த கிர்ஜா பாப்பா எதையோ உடைத்து விட்டது-னு, எங்கப் பாட்டி பொய் சொல்லிட்டு, அவங்களை திட்டி அனுப்பிட்டாங்க…!
அந்த பையன் மூச்சுவாங்க சொல்லிட்டு உள்ள ஓட…
என்ன இது-னு, பெரிய வேதனையாய் இருவரின் நெஞ்சத்தைத் தாக்க..!
சொந்த தங்கைப்போல் இருந்தாளே, இப்ப எப்படி அவளையும் அவங்களையும் கண்டுப்பிடிப்பது-னு… அழகுரலோடு லின்சி சொல்ல..!
வருவாள்… வருவாள்… கண்டிப்பா வருவாள்… அந்த மீன்விழி..! மனதை துள்ளியெழுப்பச் செய்யும் அந்த கொலுசின் ஓசை…! தினம் தினம், அவள் தன்னுடனே இருப்பதுப் போல் உணர்ந்தார்கள்…
ஒரு நாள் கடை வீதிக்கு சென்ற லின்சியையும், பூஜாவையும் யாரோ அக்கா அக்கா-னு அழைக்க..!
யாரு-னு திரும்பி பார்த்தவர்ளுக்கு, அதே கொலுசின் ஓசையோடு
கிர்ஜா…! துள்ளிக்கொண்டு ஓடிவர…!
பின்னாடி கலங்கிய விழியுடன் அமுதா!!
மீண்டும் கொலுசின் ஓசை!!
– கதைப் படிக்கலாம் – 21
இதையும் படியுங்கள் : அழுக்கு