நடப்புக் கல்வியாண்டில் 3 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
இடைநிற்றலைக் குறைக்கும் வகையிலும், பெற்றோரின் நம்பிக்கையைப் பெற்று அவர்களது குழந்தைகளை அரசுப் பள்ளயில் சேர்க்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை பல்வேறு முன் முயற்சிகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அதன் பலனாக ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நடப்பாண்டு மார்ச் 1 ம் தேதி முதல் ஜூன் 16ந் தேதி வரை எல்.கே.ஜி அட்மிஷன் மொத்தம் 22 ஆயிரத்து 757 மாணாக்கர்கள் சேர்ந்துள்ளனர். ஒன்றாம் வகுப்பு தமிழ் வழி மாணவர்கள் 1 இலட்சத்து 72 ஆயிரத்து 676 மாணக்கர்களும், 1 வகுப்பு ஆங்கில வழி மாணக்கர்கள் 52 ஆயிரத்து 57 மாணக்கர்கள் சேர்ந்துள்ளனர். 2 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை மொத்தம் 65391 மாணக்கர்கள் சேர்ந்துள்ளனர். தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அட்மிஷன் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 3 லட்சத்து 12 ஆயிரத்து 881 மாணாக்கர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.





