பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டத்தின் கீழ் புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
- 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
- 5,8,10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும்.
- EMIS இணையதளம், செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி தொடங்குவதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்டு 27-ல் பள்ளி,கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-பா.ஈ.பரசுராமன்.