நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 17ம் தேதி நடைபெற்றது.இந்த தேர்வை நாடு முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் 1,42,000 பேர் நீட் தேர்வை எழுதினர். நீட் தேர்வில் இயற்பியல் 45, வேதியியல் 45, உயிரியியல் 90 என நீட் வினாத்தாள் தொகுப்பு 180 கேள்விகளை கொண்டது. இதில், சரியான விடைக்கு 4 மதிப்பெண்களும், தவறான விடைக்கும் மொத்த மதிப்பெண்களில் இருந்து 1 மதிப்பெண்ணும் கழிக்கப்படும். முயற்சி செய்யப்படாத வினாக்களுக்கு எந்த மதிப்பெண்ணும் வழங்கப்படாது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை neet.ntac.nic.in என்ற இணையதள பக்கத்தில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம் என தேர்வு முகமை அறிவித்துள்ளது.
-பா.ஈ.பரசுராமன்.