TNSED செயலில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: மாணவர்கள், ஆசிரியர்களுக்கான செயலி வருகைப்பதிவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றை செயலி வழியாக மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கிறது. மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித்தரவை உள்ளிடவும், அதை கண்காணிக்கவும் ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த ஆப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.