பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதால், செப்டம்பர் 10ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை 4 கட்டங்களாக பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
அதன்படி, முதல்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 12 வரையிலும்
இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 25 முதல் செப்டம்பர் 27 வரையிலும்,
மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13 முதல் அக்டோபர் 15 வரையிலும்,
நான்காம் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 29 முதல் அக்டோபர் 31 வரையிலும்
நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




