தமிழகத்தில் வரும் 4ஆம் தேதி முதல் மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை :
நடப்பு கல்வியாண்டில் மருத்துவப் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு நவம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு 4ஆம் தேதி தொடங்குகிறது.
முதல் நாளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைதொடர்ந்து, 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி காலை வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
Read more – கேரளா,கர்நாடகம்,அசாம் மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு : கட்டுப்பாடுகளுடன் அனுமதி
11ஆம் தேதி பிற்பகல் முதல் 13ஆம் தேதி வரை மேனேஜ்மெண்ட் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு 160 அரசு இடங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அதில் சுமார் 13 இடங்கள் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.