சென்னை பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை இறுதி பருவத்தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .
சென்னை :
கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளுக்கு விலக்கு அளித்த தமிழக அரசு ,மேலும் அனைத்து இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் பருவத்தேர்வுகள் நடைபெறும் இதில் எந்த மாற்றமும் இல்லை என்று உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து அரியர் பாடத்திற்கு கட்டணம் செலுத்தியவர்கள் பாஸ் என்று தமிழக அரசு சார்பு தெரிவித்தாலும் AICTE இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.இது அரியர் வைத்த மாணவர்களிடையே பெரும் பீதியை கிளப்பிவருகிறது.
சென்னை பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இறுதி பருவத்தேர்வு வரும் செப்டம்பர் 21 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி மாநில மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும் அக்டோபர் 14ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.