பெரியகுளம் அருகே அரசுப்பள்ளியில் படித்த ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

நீட் தேர்வினால் ஏற்பட்ட பயத்தினால் பலரும் அதை எதிர்கொள்ளாமல் தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பல ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இருக்கின்றனர். தற்போது நீட் தேர்வின் முடிவின் வெளியாகி உள்ளது. அதில் பலரும் நல்ல மதிப்பெண்கள் வணங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரியகுளம் அருகே அரசுப்பள்ளியில் படித்த ஆடுமேய்க்கும் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இந்த நீட் தேர்வில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார், மொத்த மதிப்பெண் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை ஒரு பழச்சாறு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்தார். கொரோன காரணத்தினால் இவரால் அங்கு வேலையை தொடங்க முடியவில்லை அதனால் இவர் தன் சொந்த வீதிக்கே திரும்பி வரும் நிலை ஏற்பட்டது. அவர் தற்போது வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் ஆடு மேய்த்து வருகிறார்.
இவருடைய மகனான மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் ‘நீட்’ தேர்வில் தேசிய அளவில் அரசுப்பள்ளி மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் அரசு பள்ளியிலே படித்து இருந்தாலும் பின்னர் அவரின் பள்ளியில் ஆசிரியர்களில் உதவியால் இவர் தனியார் நீட் தேர்வு மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். மேலும் இதனை தொடர்ந்து இவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.




