இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு கடந்த பல வாரங்களாகவே மூன்று இலக்க எண்களில் பதிவாகி வருகிறது. கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து இருப்பது மக்களுக்கும் பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,767- ஆக குறைந்துள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 663- ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் 3 பேர் (ஏற்கனவே உயிரிழந்தவர்கள் பட்டியலில் சேர்ப்பு) கர்நாடகாவில் ஒருவர் மற்றும் மராட்டிய மாநிலத்தில் ஒருவர் உயிரிழப்பு கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 98.80 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் எண்ணிக்கை 219.98 கோடியாக உள்ளது.