அசாமில் இன்று 2,500 காண்டாமிருக கொம்புகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இன்று உலக காண்டாமிருக தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அசாம் அரசு இன்று 2,479 காண்டாமிருக கொம்புகளை எரித்துள்ளது. இன்று 6 ராட்சத உலைகளில் 2,479 காண்டாமிருகக் கொம்புகளை எரித்துள்ளது. கொம்புகளுக்காக விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கவும், கட்டுக்கதைகளை நீக்கவும் அசாம் அரசு காண்டாமிருக கொம்புகளை எரித்துள்ளது. அசாமில் உலகிலேயே ஒற்றை கொம்பு அதிகமாக உள்ள காண்டாமிருகங்கள் உள்ளது.
இப்பகுதியில் உள்ள காசிரங்கா, மணஸ், ஓரங் ஆகிய பகுதியின் தேசிய பூங்காவில் உள்ள 2,500 க்கும் அதிகமான காண்டாமிருக கொம்புகள் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிகழ்வில், அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஒரு சில அமைச்சர்கள், மற்றும் வன அதிகாரிகள் பங்கேற்றனர்.