மராட்டிய மாநிலத்தில் உள்ள கொரோனா மையத்தில் தீடிரென பற்றிய தீவிபத்தால் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 முதல் பல கோடி உயிர்கள் பலியாகி உள்ளது. அதேபோல், இந்தியாவில் ஒரேநாளில் இந்த கொடூர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.
Read more – குஜராத்தில் 10 நாட்களில் அமைக்கப்பட்ட கொரோனா மையம்… 900 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை இன்று திறப்பு…
அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில் கொரோனா தொற்றின் விளைவால் ஒரு நாளில் 60 ஆயிரம் நபர்களும், டெல்லியில் 25 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பல்கார் மாவட்டம் வாசை என்ற பகுதியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டது சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், அந்த மருத்துவமனையில் தீடிரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. மேலும், கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.