இனி விலங்கு மற்றும் செல்ல பிராணிகளை துன்புறுத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை என்று விலங்குகள் வதை சட்டத்தில் புதிய திருத்தம் அமலுக்கு வருகிறது.

புதுடெல்லி :
நாளுக்கு நாள் இந்தியாவில் வன விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகளை சிலர் துன்புறுத்தி கொலை செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில், விலங்குகளை காயப்படுத்தினாலோ அல்லது கொன்றாலோ இனி 50 ரூபாய் அபராதம் செலுத்துவதன் மூலம் தப்பிக்க முடியாது. ஏனெனில், 60 வருடப் பழமையான விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் வரைவு அறிக்கையை மத்திய அரசு தயாரித்து உள்ளது.
இந்நிலையில், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து 750 ரூபாய் முதல் 7, 500 ரூபாய் வரை அபராதம் மற்றும் சிறை தண்டனையும் விதிக்கப்படும். தற்போது இருக்கும் சட்டம் விலங்குகளை துன்புறுத்தினாலோ, அடித்தாலோ, அதிகமான பாரத்தை சுமக்க வைத்தாலோ 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யும் வகையிலே இருக்கிறது.
Read more – பொலிவியா நாட்டில் கொரோனாவிற்கு நீராவி சிகிச்சை : ஆர்வத்தில் குவியும் பொதுமக்கள்
இதுகுறித்து மத்திய கால்நடைத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது: விலங்குகள் மீதான கொடுமையை தடுக்கும் சட்டத்தில் திருத்தம் தேவைப்படுவதால் கடுமையான அபராதங்கள் மற்றும் தண்டனை விதிக்க மத்திய அரசு பரிந்துரை செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும், இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட உள்ளது என்றும் கூறியுள்ளார்.




