இந்தியா முழுவதும் அப்துல்கலாமின் பிறந்தநாள் நினைவுகூரப்பட்டு வருகிறது.
கடந்த 1931 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி பிறந்தார் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam.)
ஒரு மனிதன் தன்வாழ்நாளில் எப்படி வாழ வேண்டுமென்பதற்கு உதாரணத்துவமாக வாழ்ந்தவர் அப்துல்கலாம்.
ஏழ்மையிலும் இலட்சியத்தை இடைவிடாமல் பிடித்து,தன் முயற்சியால் கடும் பயிற்சி செய்து உச்சம் தொட்ட ஏவுகண நாயகன்.
தன் பிறப்பை ஒரு சரித்திரமாக மாற்றி.ல் உலக இளைஞர்களின் லட்சிய முன்மாதிரி அவர்.
தூங்கினால் வருவதல்ல கனவு எது உங்களைத் தூங்கவிடாமல் செய்கிறதோ அதுவே உண்மையான கனவு என்று உலகிற்கு இலட்சியக் கனவைக் குறித்துத் தனது தத்துவங்கள் மூலம் விளக்கினார்.
அவருக்கு இந்தியாவின் முதல் குடிமகன் என்ற குடியரசுத் தலைவர் பதவியைக் கொடுத்து பாரதத் தாய் அழகு பார்த்தார்.
அக்னிச் சிறகுகளில் தான் வாழ்க்கையை வடித்துக்,2020 –ல் இந்தியா வல்லரசாக தன் வாழ்க்கையைத் தியாகம் செய்த பூரண ஜோதி அவர். மாற்றுத் திறனாளிகள் வாழ்விற்கு விளக்கேற்றி, மாணவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் அவர்.
இத்தனை சிறப்புகள் கொண்டு மக்களின் நெஞ்சங்களில் எளிமையின் நாயகராகவும் செயல் வீரராகவும் வீற்றிருக்கும் இளைஞர்களின் எழுச்சி நாயகனின் 89 வது பிறந்தநாளைக் கொண்டாடுவோம்.