வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு அனுப்பிய பேச்சுவார்த்தை கடிதத்தை விவசாய அமைப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து கடந்த 27 நாட்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதியை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.கடும் குளிரையும் பாராமல் இரவு பகலாக தொடர்ந்து சாலைகளில் உறங்கியும், போராட்ட களத்தில் சமைத்து உணவருந்தி வருகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த பல விவசாயிகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முதல் விவசாய அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மற்ற மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் அடுத்தடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.
Read more – பிரிட்டனில் இருந்து சென்னை திரும்பியவருக்கு கொரோனா தொற்று : அச்சத்தில் தமிழக மக்கள்
மத்திய அரசு இந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர விவசாய அமைப்பினருக்கு கடிதம் ஒன்றை எழுதியது.மத்திய அரசின் இந்த பேச்சுவார்த்தை கடிதத்தை விவசாய அமைப்பினர் நிராகரித்து 2 வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.