மத்திய அரசின் புதிய கொள்கைகளை எதிர்த்து நாடுமுழுவதும் 25 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டுவந்த புதிய தொழிலாளர் கொள்கை,புதிய வேளாண் கொள்கை மற்றும் மேலும் பல திட்டங்களை எதிர்த்து 10 மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் இன்று நாடுமுழுவதும் 25 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் பல இடங்களில் முக்கிய நிறுவனங்கள்,கடை வீதிகள் மூடப்பட்டு இருந்தது.இந்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் உட்பட பல முக்கிய ஊழியர்களும் போராட்டத்தில் கலந்துள்ளனர்.
வங்கி ஊழியர்களின் சார்பில் வங்கிகளுக்கான இருப்பு தொகைக்கான வட்டி சதவீதம் அதிகரித்தல், அதற்கான சேவை கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் மேலும், போதிய பணியமர்த்தல், வங்கி தனியார் மயமாதல் எதிர்ப்பு மற்றும் ஒப்பந்த நடைமுறை எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த போராட்டத்தினால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மற்றும் வங்கி பணிகள் முழுவதுமாய் முடங்கியது.உத்திர பிரேதசத்தில் இந்த போராட்டத்தினை எதிர்க்கும் வகையில் அத்தியாவசிய சேவை பராமரிப்பு சட்டத்தை அந்த அரசு மேலும் 6 மாத காலங்கள் நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.