கேரள மாநிலத்தில் மனவலிமையால் கொரோனாவினை வென்று உற்சாகத்துடன் வீடு திரும்பிய 103 வயது முதியவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக கேரளத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைவாக இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் முதல் தொற்றின் வேகம் அதிகரித்துவருகிறது. இதுவரை மாநிலத்தில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைக்கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து யாராலும் தப்பிக்க முடியவில்லை என்றே சொல்லாம். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்களை வரை அனைவரையும் பாரபட்சம் இல்லாமல் தாக்குகிறது.
இந்த நிலையில் தான் கேரளாவில் உள்ள ஆலுவா பகுதியை சேர்ந்த பரீத் என்ற 103 வயது முதியவர், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி எர்ணாகுளம் கலமசேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய மனவலிமையினால் தற்போது அவர் சிகிச்சை முடிந்து கொரோனாவில் இருந்து குணமடைந்து பரீத் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த வயதிலும் மற்றவர்களுக்கு மனவலிமையுடன் இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்த இந்த முதியவரை மலர்க்கொத்து கொடுத்து மருத்துவமனை ஊழியர்கள் வழியனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.




