அயோத்தி ‘ராமர் கோவில் கட்டுமானத் திட்ட செலவு ரூ.1,100 கோடி’ கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உத்திரப் பிரதேசம் :
உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ரூ.1,100 கோடி செலவில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இந்த கோவிலின் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.“ஐஐடி வல்லுநர்கள், டாட்டா குழுமம் மற்றும் எல் அண்ட் டி சிறப்பு பொறியியல் வல்லுநர்கள் இந்தக் கட்டுமான பணிக்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மூலம் ராமரை பிரதிஷ்டை செய்ய உள்ள கோவில் மட்டுமே 300 முதல் 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
Read more – ”ரஜினி எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்” : சீமான் ட்வீட்
மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளையில் இதுவரை 100 கோடி ரூபாய் நன்கொடை ஆன்லைன் மூலம் பெற்றுள்ளது” என்று கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் தெரிவித்துள்ளார்.இந்த அறக்கட்டளை ராமர் கோவில் கட்டுமான பணிகளை நிர்வகிக்கவும், கோவில் நிர்வாகத்தை கவனிக்கவும் அமைக்கப்பட்டுள்ளது.