வழிப்பறி செய்தபோது பொருள் எதுவும் கிடைக்காத விரக்தியில் சைக்கிளில் சென்ற சிறுவனை கத்தியால் சராமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிய சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு நகரத்தில் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிகளில் முதன்மையானதாக இருப்பது ரிச்மண்ட் டவுன். இரவு நேரத்தில் 16 வயது சிறுவனை பைக்கில் வந்த சில மர்ம நபர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
ஒரு மறைவான இடத்தில் சிறுவனை வழிமறித்த அவர்கள், விலை உயர்ந்த பொருட்களை கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனா சிறுவனிடத்தில் ஒன்றுமில்லை. இதனால் ஆத்திரமடைந்த திருடர்கள் சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
உடனடியாக குடும்பத்தாரை தொடர்பு கொண்ட சிறுவன், பவ்ரிங் மற்றும் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். அவருக்கு 36 தையல்கள் போடப்பட்டுள்ளன. தற்போது வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
மத்திய பெங்களூருவில் அமைந்துள்ள ரிச்மண்ட் டவுன் பெங்களூரின் ஆடம்பரமான இடங்களில் ஒன்றாகும். அந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.