பிபிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு தீடிரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் நடித்த ஃபார்ச்சூன் எண்ணெய் விளம்பரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கொல்கத்தா :
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரங் கங்குலிக்கு கடந்த 2 ம் தேதி திடீரென நெஞ்சு வலியுடன் தலைசுற்றுதல் மற்றும் வாந்தி ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் மூன்று அடைப்புகள் இருந்த நிலையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. அவரது உடல் நிலை குறித்து டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், சவுரங் கங்குலி நடித்த ஃபார்ச்சூன் எண்ணெய் விளம்பரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த விளம்பர படத்தில் ரைஸ் பிரான் சமையல் எண்ணெய் இதயத்துக்கு நல்லது. 40 வயதிலும் கூட உங்கள் வாழ்க்கையை முழுவதும் அனுபவிக்கலாம். உங்கள் நோய் எதிர்ப்பாற்றல் இதய வலிமையை உறுதி செய்து கொள்ளுங்கள். என்று தெரிவித்திருந்தார். தற்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு இந்த ஃபார்ச்சூன் ரைஸ் பிரான் தான் காரணம் என்று தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கேள்வி மற்றும் விமர்சனங்கள் எழுந்தன.
Read more – இன்றைய ராசிபலன் 06.01.2021!!!
இதுகுறித்து, ஃபார்ச்சூன் எண்ணெய் நிறுவனத்தின் சிஇஓ அங்சு மாலிக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒருவரும் கண்ணில் தூசி விழுந்ததற்கு காரணம் காடு தான் என்று காட்டை அளிப்பது போல சமூக வலைத்தளங்களில் பொய் பரப்பி வருகிறார்கள். ரைஸ் பிரான் ஆயில் உலகின் மிகவும் ஆரோக்கியமான எண்ணெய்களில் ஒன்றாகும். இது மருந்து நிறுவனம் அல்ல. எண்ணெய் நிறுவனம் தான் என்றார். மேலும், நாங்கள் சவுரவ் கங்குலி உடன் தொடர்ந்து பணியாற்றுவோம். அவர் தொடர்ந்து எங்கள் பிராண்டு தூதராக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் நிறுவனம் மற்றும் குஜராத்தை சேர்ந்த அதானி நிறுவனம் இணைந்து ஃபார்ச்சூன் ரைஸ் பிரான் எண்ணெய் உற்பத்தியை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.




