பா.ஜ.க எம்.பி. பிரக்யா தாகூர் மீண்டும் சர்ச்சைக்குரிய முறையில் பேசி சிக்கலில் சிக்கி உள்ளார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தில் சத்திரிய மகா சபை என்ற அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் பா.ஜ.க எம்.பி. பிரக்யா கலந்துகொண்டு இந்து மதத்தில் உள்ள சாதிய கோட்பாடுகளை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.அவர் பேசிய கருத்துக்கள் தற்போது இந்திய மக்களிடையே கடும் அதிருப்தியை வெளிப்படுத்திவருகிறது.அந்த கூட்டத்தில் “நீங்கள் ஒரு சத்திரியர்களை சத்திரியன் என்று அழைத்தால், அவர்கள் மோசமாக கருத மாட்டார்கள் , ஒரு பிராமணர்களை பிராமணர் என்று அழைத்தால் அவர்கள் மோசமாக கருத மாட்டார்கள், ஒரு வைசியர்களை வைசியர் என்று அழைத்தால், அவர்கள் மோசமாக கருத மாட்டார்கள். ஆனால் நீங்கள் ஒரு சூத்திரர்களை சூத்திரர் என்று அழைத்தால் மட்டும் கோபப்படுவது ஏன் ? என்று பேசியுள்ளார்.
Read more – நைஜீரியா: துப்பாக்கி முனையில் 2 இந்தியர்கள் கடத்தல்
மேலும்,வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வருபவர்களை தேச விரோதிகள் என்று குறிப்பிட்டு சாஹீன் பாக் போராட்டத்தில் செய்ததை போலவே இப்போதும் நாட்டிற்கு எதிராகக் குரல் எழுப்பி தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரக்யா தாகூர்,2019 ம் ஆண்டு மக்களவை கூட்டத்தில் கோத்சே ஒரு தேசபக்தர் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.