டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்த பாப் பாடகி ரிஹானாவை பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக சாடியுள்ளார்.
புதுடெல்லி :
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் மாற்று ஹரியானா பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து கடும் குளிர், மழை பாராது போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Read more – 30 வருடங்களாக தொடர்ந்த புகைப்பழக்கம்… மஞ்சள் நிறமாக மாறிய 60 வயது முதியவரின் உடல்..
இந்தநிலையில், விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளின் புகைப்படத்தை பதிவிட்டு, இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து அவரின் இந்த கருத்திற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ட்விட்டரில் கடுமையாக சாடியுள்ளார். அதில், டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். இதனால் பாதிக்கப்படக்கூடிய நமது தேசத்தை சீனா கையகப்படுத்தி, அமெரிக்காவை போன்று ஒரு சீனக் காலனியாக மாற முடியும். முட்டாள்… நாங்கள் உங்களைப் போல எங்கள் தேசத்தை விற்கவில்லை என்று தெரிவித்தார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் இந்த பதிவு கடும் சர்ச்சையை உருவாக்கி பலரும் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.