ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் பறந்த பாகிஸ்தான் நாட்டு டிரோன் மீது துப்பாக்கியால் சுட்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் விரட்டியடித்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்லை பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் 2 இந்திய ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டனர்.எனவே பயங்கரவாதிகள் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ சமயம் பார்த்துக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், இந்திய ராணுவம் கூடுதல் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஆர்.எஸ்.புரா எல்லை பகுதியில் பாகிஸ்தானின் டிரோன் விமானம் நேற்று இரவு பறந்தது.அப்பொழுது இதை உடனடியாக கண்காணித்த இந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை தந்தனர்.இந்த திடீர் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு சொந்தமான அந்த டிரோன் விமானம் அவர்களது எல்லை பகுதிக்குள் அதிவேகத்தில் சென்று மறைந்தது.