சமையல் எண்ணெய் மீதான சுங்கவரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் சில தினங்களில் எண்ணெய் பொருட்கள் விலை பெருமளவு குறையும் என எதிர்பார்ப்பு.

கொரோனாவிற்கு பிந்தைய காலங்களில் பொருளாதாரம் சமன்பாடற்ற நிலையில் உள்ளது; ஏற்றுமதி இறக்குமதி என வர்தகங்களின் நிலை சீராக இல்லை!! என சர்வதேச பொருளாதார நிருபுணர்கள் கருதுகிறார்கள். அதனால் தான் பெட்ரோல் , டீசல் , நிலக்கரி மற்றும் சமையல் எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்வை சந்திக்கின்றது. ஒருபக்கம் சர்வதேச விலை உயர்வு என்றால் மற்றொரு பக்கம் அதனை இறக்குமதி செய்யப்படும் போது விதிக்கப்படும் வரிகள் மேலும் விலை உயர்வுக்கு வழிவகை செய்கிறது. இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு தேவைப்படும் சமையல் எண்ணெயில் 60% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே தேவையை பூர்த்தி செய்து கொள்கிறோம். இப்படிபட்ட நிலையில் எந்த ஒரு சத்தமும் இன்றி சமையல் எண்ணெய் லிட்டருக்கு 45 ரூபாய்க்கு மேல் உயர்ந்துவிட்டது. அதாவது இந்த வருடத்தில் மட்டும் 46% விலை உயர்ந்துள்ளது. இதனை கட்டுபடுத்த மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் கடந்த 11ம் தேதி முக்கிய முடிவை அறிவித்தது. அதாவது, நாட்டில் சமையல் எண்ணெய் பொருட்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களை இருப்பு வைத்து கொள்ள உட்சவரம்பை அறிவித்தது. இதனால் விலையேற்றம் காரணமாக பதுக்கி வைத்துள்ள எண்ணெய் பொருட்கள் வெளியே கொண்டுவர தொடங்குவார்கள்; இதன் காரணமாக ஓரளவுக்கு தேவையும் , விலையும் குறையும் என நம்பப்பட்டது. ஆனால் இந்திாவில் உள்நாட்டு இருப்பை விட வெளிநாட்டு வர்தகமே அதிகம் என்பதால் பெருமளவு விலையை குறைக்க வரியை ரத்து செய்ய வேண்டும் என நிபுணர்கள் கருதினார்கள். இதனால், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான சுங்க வரியை 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி மத்திய அரசின் அறிவிப்பின்படி, பண்டிகை காலங்கள் மற்றும் விலையேற்றம் கருத்தில் கொண்டு பாமாயிலுக்கான சுங்க வரி 10% இருந்து 2.5% -மாகவும் , சோயா பீன்ஸ் , சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி 7.5 % இருந்து 2.5 % குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் சுங்க வரி 0% ஆக குறைக்கப்பட்டுள்ளது நிலையில் சமையல் எண்ணெய் பொருட்கள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் இருப்பின் உட்ச வரம்பு நிர்ணயம் மற்றும் சுங்க வரி ரத்து இரண்டும் 2022ம் ஆண்டு மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




