பப்ஜி விடியோ கேம் செயலி மீதான தடையை நீக்குவது தொடர்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னையை தொடர்ந்து, அந்நாட்டுடன் ஆன பொருளாதார உறவை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதேசமயம், இந்தியாவில் பயன்படுத்தப்படும் சீன செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இந்திய இறையாண்மைக்கு எதிராக இருபதாகக் கூறி, இந்தியாவில் அதிக பயனாளர்களை கொண்டிருந்த டிக் டாக், பப்ஜி போன்ற 100-க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதனிடையே, பப்ஜி வீடியோ கேம் செயலியை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்த செயலி மீதான தடை எப்போது வேண்டுமானலும் நீக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், அந்த தடை தொடர்ந்து நீடிக்கும் எனவும், சீன செயலி என்பதை தாண்டி, அதன் வன்முறை தன்மை குறித்த புகார்களே தடைக்கு காரணம் எனவும் மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.