நாளை முதல் நாடு முழுவதும் முக்கியமான சில புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆவண பாதுகாப்பு, உடல்நலம், காப்பீடு, அரசுக்கு கூடுதால் வருவாய் போன்ற இலக்குகளின் அடிப்படையில் மத்திய அரசு பல்வேறு புதிய சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. இவை அனைத்தும் நாடு முழுவதும் நாளை முதல் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- அதன்படி, ஓட்டுநர் உரிமத்திற்கான ஆவணங்கள், இ-சலான் ஆகியன இனிமேல் இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்படும். உரிமம் பெறுவதற்கு இனி அளவுக்கு அதிகமான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை.
- இறக்குமதி செய்யப்படும் டிவிக்களுக்கு கூடுதலாக 5 சதவிகித சுங்கவரி விதிப்பதால் அவற்றின் விலை அதிகரிக்க உள்ளது.
- அதே போன்று, வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்புபவர்களிடம் இருந்து, நாளை முதல் கூடுதலாக 5 சதவிகித வரி வசூலிக்கப்பட உள்ளது.
- மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் தங்களது திட்ட விதிகளை மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் டெலிமெடிசனுக்கும் இனி காப்பீடு பொருந்தும்
- இறுதியாக, இனிப்புகளை விற்கும் கடைகாரர்கள், பொட்டலங்களில் விற்கும் திண்பண்டங்களுக்கும் காலாவாதி தேதியை குறிப்பிட்டு, அவற்றை எத்தனை நாட்களுக்குள் சாப்பிட்டுவிட வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.