ரயில்வே வாரிய பணிகளுக்கான தேர்வு தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரயில்வே வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிறப்புவதற்கான அறிவிப்பு ஊரடங்கிற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, அலுவலக உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் அப்ரெண்டீஸ் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, ரயில்வேயில் காலியாக உள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் பணியிடங்களுக்கு, 2 கோடியே 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் இந்த பணிகளுக்கான தேர்வு நடைபெறுவது தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேர்வுகள் தொடங்க உள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
.
ரயில்வே வாரிய தலைவரும், தலைமை செயல் அதிகாரியான வி.கே.யாதவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளார். தேர்வுக்கான கால அட்டவணை விரைவில் ரயில்வே வாரிய இணையதளத்தல் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.