சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி:
சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருந்தது. இந்த திட்டத்திற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 1900 1,900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு கொண்டு வந்த சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக அந்த நிலத்தின் உரிமையாளர்கள்,விவசாயிகள்,பல முன்னணி கட்சி தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் போன்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்தும், 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடையும் விதித்தது.மேலும் 8 வார காலத்திற்குள் அவர்களின் நிலத்தை ஒப்படைக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதி மன்றத்தின் இந்த உத்தரவிற்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் டெல்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது.இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் இன்று தீர்ப்பை வழங்கினார்,அதன்படி,சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.அந்த திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்த தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்.
சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. புதிய அறிவிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டு நிலங்களை கையகப்படுத்தலாம்.ஏற்கனவே விடுக்கப்பட்ட அரசாணை செல்லாது.உரிய துறைகள் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற்று 8 வழிச்சாலை திட்டத்தை புதிதாக தொடங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.




