பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னை:
உச்சநீதிமன்றத்தின் விடுமுறை நாளில் பொங்கல் பண்டிகையும் இணைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள வரவேற்பு செய்தியில் கூறியிருப்பதாவது:
பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 2021 ஜனவரி, 14 மற்றும் 15 தேதிகளில் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அறிவிப்பினை மனதார வரவேற்கிறேன்.
பொங்கல் நாளின் சிறப்பினை அனைவரும் அறிய உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவித்த உச்ச நீதிமன்றத்திற்கு இத்தருணத்தில் என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




